8 லட்சம் பேருக்கு இலவசம்!! இலவசம் !! இலவசம்!!!!!
BIND என்ற திட்டத்தின் கீழ், இந்திய எல்லைகளில் உள்ள மக்களில் 8 லட்சம் பேருக்கு தூர்தர்ஷன் டிடிஎச் சேவை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுபற்றி அண்மையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் ஆல் இந்தியா ரேடியோ மற்றும் தூர்தர்ஷனை விரிவுபடுத்த 2 ஆயிரத்து539 கோடி ரூபாய் செலவிடவும் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 2025-26ம் ஆண்டுகளுக்குள் அரசின் FM சேனல்கள் 80 விழுக்காடு மக்களை சென்றடைய அரசு தீவிர முயற்சிகளை செய்து வருவதாக கூறப்பட்டுள்ளது. இரண்டு மற்றும் 3-ம் தர நகரங்களிலும், இடது சாரி அமைப்புகளால் பாதிக்கப்பட்ட நகரங்களிலும் பன்பலைகளை வலுப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் தூர்தர்ஷனின் 28 பிராந்திய சேனல்கள் HD தொழில்நுட்பத்துக்கு மாற்றப்பட இருக்கிறது. 31 செய்தி சேனல்களுக்கு அதிநவீன தொழில்நுட்ப சாதனங்கள் வாங்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ராமேஸ்வரத்தில் 300 மீட்டர் உயரத்தில் 20 கிலோவாட் FM டிரான்ஸ்மிட்டர் ஒன்றையும் மத்திய அரசு நிறுவ இருக்கிறது. வடகிழக்கு மாநிலங்களில் DDK கவ்ஹாத்தி,ஷில்லாங்க், உள்ளிட்ட சேனல்கள் HDTV அந்தஸ்துக்கு தரம் உயர்த்தவும் பணிகள் நடந்து வருகின்றன.