இந்தியாவின் வளர்ச்சிக்கு தடையாகும் எரிபொருள் விலை உயர்வு – மோர்கன் ஸ்டான்லி
எரிபொருட்களின் விலை உயர்வு, இந்தியாவின் வளர்ச்சி வாய்ப்புகளுக்கு மிகப்பெரிய அபாயங்களை உருவாக்கும் என்று மோர்கன் ஸ்டான்லி நிறுவனம் தெரிவித்திருக்கிறது, தேவைகளின் நிலையை சீர் செய்வது பெரிய அபாயங்களைத் தவிர்க்கக் கூடும் என்று அந்த நிறுவனம் நம்புகிறது, கடந்த சில வாரங்களாக எரிபொருட்களின் விலை மிகப்பெரிய அளவில் அதிகரித்து இரட்டை இலக்கங்களில் உயர்ந்துள்ளது.
கச்சா எண்ணெய் விலை $85 அளவுக்கு உயர்ந்து உலகளாவிய கச்சா எண்ணெய் விலையானது அக்டோபர் மாதத்தில் $80 / பிபிஎல் குறியீட்டைத் தாண்டி இருக்கிறது. 2021 ஆம் ஆண்டில் மட்டும் இது 63.3% உயர்வாகும். ஜூன் மாதத்தில் இது 41 % ஆக இருந்தது. நிலக்கரி விலையானது இந்த மாதத்தில் மட்டும் 15 % உயர்ந்து மெட்ரிக் டன் 200 டாலராக இருக்கிறது.
இந்தியாவைப் பொறுத்தவரை எரிபொருட்களின் இந்த விலை உயர்வு, அதிக அளவிலான பணவீக்கம், மெதுவான வளர்ச்சி போன்றவற்றை ஏற்படுத்தலாம், நிதிக் கொள்கையை இது சீர்குலைக்குமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது, வளர்ச்சி மேம்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்திய ரிசர்வ் வங்கி வரும் 2022 பிப்ரவரியில் ரெப்போ விகித உயர்வை மேற்கொள்ளும் என்று மோர்கன் ஸ்டான்லி தெரிவித்திருக்கிறது.
உலகளாவிய பணவீக்கம் மற்றும் நிதிக் கொள்கை மாற்றங்கள் விரைவாக நடக்கத் துவங்கினால் பணவீக்கம் அதிகரித்து பொருளாதார வளர்ச்சியை சீர்குலைக்கும் அபாயமாக மாறும் என்றும், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) நிதியாண்டு 22 இல் 10.5% ஆகவும், நிதியாண்டு 23 இல் 7.2% ஆகவும் உயரும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் மோர்கன் ஸ்டான்லியின் இந்த அபாய எச்சரிக்கை கூர்ந்து கவனிக்கப்படும் ஒன்றாக மாறி இருக்கிறது.