அவசரத் தேவையாக ₹3,500 கோடி, அமேசானிடம் கேட்கும் ஃபியூச்சர் ரீடெய்ல் !
ஃபியூச்சர் ரீடெய்ல் லிமிடெட் (FRL) இன் இயக்குநர்கள், ஜனவரி 29 தேதிக்குள் ₹3,500 கோடி செலுத்தும்படி அமேசானைக் கேட்டுக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இயக்குநர்கள், வெள்ளிக்கிழமை அமேசானுக்கு எழுதிய கடிதத்தில், FRLக்கு அவசரமாகப் பணம் தேவைப்படுவதாகவும், ஜனவரி 29, 2022க்குள் செலுத்த வேண்டும் என்றும், தவறினால் அது NPA (செயல்படாத சொத்து) என வகைப்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளனர்.
நாளை ஜனவரி 22, 2022 க்குள் நிதி வழங்குவதை உறுதிப்படுத்துமாறு அமேசானைக் கேட்டுக் கொண்டனர். இந்த மாதத் தொடக்கத்தில், ஃபியூச்சர் ரீடெய்ல் நிறுவனம், அமேசான் மீது தொடர்ந்த வழக்கு காரணமாக சொத்துக்களை விற்க முடியாமல், அதன் பணமாக்கும் திட்டங்களை பாதித்ததால், வங்கிகள் மற்றும் கடன் வழங்கியவர்களுக்கு ₹3,494.56 கோடி செலுத்துவதற்கான காலக்கெடுவை தவறவிட்டதாக கூறியது.
அமேசான் தனது ஜனவரி 19 கடிதத்தில், ‘ஈஸிடே’ மற்றும் ‘ஹெரிடேஜ் ஃப்ரெஷ்’ பிராண்டுகளை உள்ளடக்கிய தனது சிறிய வடிவிலான கடைகளை FRL விற்க முன்வந்துள்ளது என்று சில ஊடக ஆதாரங்களில் இருந்து அறிந்திருப்பதாக கூறியுள்ளது. அமெரிக்க இ-காமர்ஸ் நிறுவனத்தின் அனுமதியின்றி சிறிய வடிவிலான கடைகளை நிறுவனம் விற்பனை செய்வது தடை உத்தரவை மீறும் செயலாகும் என்று அது வலியுறுத்தியுள்ளது. FRL, நிதிக் கவலைகளை நிவர்த்தி செய்வதில் உதவுவதற்கான அதன் விருப்பத்தையும் அமேசான் மீண்டும் வலியுறுத்தியது.
இது குறித்து, அமேசான் சமாரா கேபிட்டல் சார்பாக செயல்பட முடியுமா மற்றும் அதன் சார்பாக அத்தகைய பரிவர்த்தனையை பேச்சுவார்த்தை நடத்தி இறுதி செய்ய அதிகாரம் உள்ளதா என்பதை உறுதிப்படுத்துமாறு முதன்மை இயக்குநர்கள் அமேசானைக் கேட்டுக்கொண்டனர். 2020 அக்டோபரில் சிங்கப்பூர் சர்வதேச நடுவர் மையத்தில் (SIAC) அமெரிக்க இ-காமர்ஸ் நிறுவனமான ஃபியூச்சர் குழுமத்தை நடுவர் மன்றத்திற்கு இழுத்ததை அடுத்து, ஃபியூச்சர் மற்றும் அமேசான் கடுமையான சட்டப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
அதன் சொத்துக்களை பில்லியனர் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்திற்கு ₹24,713 கோடிக்கு விற்பனை செய்தது. டிசம்பரில், இந்திய போட்டியாளர் ஆணையம் (CCI) FRL இன் ஃபியூச்சர் கூப்பன்ஸ் பிரைவேட் லிமிடெட் (FCPL) இல் 49 சதவீத பங்குகளை வாங்குவதற்கான அமேசானின் ஒப்பந்தத்திற்கான 2019 ஒப்புதலை இடைநிறுத்தியது, அதே நேரத்தில் e-காமர்சுக்கு ₹202 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. CCI உத்தரவை அமேசான், தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கை அடுத்த விசாரணைக்கு பிப்ரவரி 2ஆம் தேதி பட்டியலிட NCLAT உத்தரவிட்டுள்ளது.