பியூச்சர் ரீட்டெயில் பியூச்சர் என்ன?
பியூச்சர் குழுமத்தின் தலைவராக திகழ்ந்தவர், கிஷோர் பியானி. இந்த குழுமத்தில் கடன் அதிகரித்து வந்தது.இதையடுத்து தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக கிஷோர் பியானி அறிவித்துள்ளார். கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கடன் வைத்துள்ள இந்த நிறுவனத்திற்கு, கடன் கொடுத்தவர்கள் விடாமல் கேட்டுக்கொண்டே இருந்ததால் நிறுவனத்தையே விற்கவும் கிஷோர் முன்வந்தார், ஆனாலும் பிரச்னை தீர்ந்தபாடில்லை.திவால் நிறுவன விதிகள் 2016-ன்படி நிறுவனத்தின் குழுவின் முன்பு தனது ராஜினாமாவை கிஷோர் அளிக்கிறார். அதீத கடனில் சிக்கித்தவித்த பியூச்சர் குழுமத்தில் 19 நிறுவனங்களை ரிலையன்ஸ் குழுமம் வாங்க முயற்சித்தது.ஆனால் அதனை நீதிமன்றம் வரை சென்று அமேசான் நிறுவனம் தடுத்து நிறுத்தியது நினைவில் கொள்ள வேண்டிய அம்சமாகும். 24 ஆயிரத்து 713 கோடி ரூபாய் மதிப்பில் மொத்த சொத்துகளையும் விற்க முயன்ற பியூச்சர் குழுமம், செய்வதறியாமல் திகைத்து நிற்கிறது என்பதே நிதர்சனமாக உள்ளது.