கெயில் இந்தியாவின் நிகர லாபம் – காலாண்டில் ரூ.3 கோடி..!!
கெயில் (இந்தியா) லிமிடெட், நடப்பு நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் ரூ. 3,288 கோடி நிகர லாபத்தைப் பதிவு செய்துள்ளது. இது முந்தைய காலாண்டில் ரூ.2,863 கோடியுடன் ஒப்பிடும்போது 15 சதவீதம் அதிகமாகும் என்று பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
வரிக்கு முந்தைய லாபம் 166 சதவீத வளர்ச்சியை நிறுவனம் பதிவு செய்தது. 21ஆம் நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் ரூ.3,774 கோடியிலிருந்து ரூ.10,044 கோடியாக இருந்தது.
மத்திய இயற்கை எரிவாயு அமைச்சகம் தகவல்:
மேம்படுத்தப்பட்ட சிறந்த தயாரிப்பு விலைகள், எரிவாயு சந்தைப்படுத்தல் மற்றும் டிரான்ஸ்மிஷன் பிரிவில் சிறந்த செயல்திறன் ஆகியவற்றின் காரணமாக, வரிக்குப் பிந்தைய லாபம், 7,681 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது என்று பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒருங்கிணைந்த அடிப்படையில், செயல்பாடுகளின் வருவாய் 2022ஆம் நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் 20 சதவீதம் அதிகரித்து, 26,176 கோடி ரூபாயாக இருந்தது என்றும் கூறியது. அத்துடன் Q3 FY22 இல் வரிக்கு முந்தைய லாபம் 29 சதவீதம் அதிகரித்து ரூ.4,820 கோடியாக இருந்தது. 2022 நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் 3,728 கோடி ரூபாயும், 2022 நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் வரிக்குப் பிந்தைய லாபமும் 31 சதவீதம் அதிகரித்து, 2ம் நிதியாண்டில் ரூ.2,883 கோடியாக இருந்தது என்று பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் தெரிவித்துள்ளது.