ஜிடிபி குறைப்பு.. ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை.!!
2022-23-ம் நிதியாண்டுக்கான நாட்டின் பொருளாதார வளர்ச்சியை 7.2 சதவீதமாக குறைத்து அறிவித்துள்ள இந்திய ரிசர்வ் வங்கி, ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை எனவும் அறிவித்துள்ளது.
2022-ம் ஆண்டின் ஜிடிபி குறைப்பு:
RBI இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை நிதிக்கொள்கை குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று(08.04.2022) 10-வது நிதிக்கொள்கை குழுக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு பின் செய்தியாளர்களிடம் இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் பேசினார். அப்போது, நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.8 சதவீதம் அளவுக்கு வளர்ச்சி அடையும் என்று 9-வது நிதிக்கொள்கை குழு கூட்டத்தில் கூறியிருந்தோம். ஆனால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பொருளாதார வளர்ச்சி 7.2 சதவீதமாகத்தான் இருக்கும் என்று தெரிவித்தார்.
கச்சா எண்ணைய்யின் விலையை பேரல் நூறு டாலர் என்ற விகிதத்தில் வைத்துதான் பொருளாதார வளர்ச்சி தொடர்பாக கணக்கீட்டை வகுத்துள்ளோம் என்றும், நடப்பு நிதியாண்டை பொறுத்த வரை பணவீக்கமும் சராசரியாக 5.7 சதவீதமாக அதிகரிக்கும் எனவும் கூறினார்.
ரெப்போ மாற்றமில்லை:
RBI இரண்டு நடப்பு நிதியாண்டில் குறுகிய காலக் கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி ஆளுநர் கூறியுள்ளார். அதன்படி, குறுகிய காலக் கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் 4 சதவீதமாகவும், ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் 3.5 சதவீதமாகவும் தொடரும் எனவும் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார்.