ஜெர்மனி பொருளாதாரம் மந்தம்..
உலகின் பல நாடுகளையும் ஆட்டிப்படைப்பது பொருளாதார மந்தநிலையும்,அதிகரித்த விலைவாசியும்தான். இதற்கு ஜெர்மனி நாடு ஒன்றும் விதிவிலக்கு இல்லை. அந்நாட்டின் இரண்டாவது காலாண்டு உள்நாட்டு உற்பத்தி குறித்த புள்ளி விவரங்கள் வெளியாகியுள்ளன. அதில் கடந்த காலாண்டில் எவ்வளவு இருந்ததோ அதே நிலைதான் இரண்டாவது காலாண்டில் இருப்பது தெரியவந்துள்ளது. அந்நாட்டு உள்நாட்டு உற்பத்தி 0.3 அல்லது 0.4% வரை சரிய வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் ஏற்கனவே கணித்திருந்தனர். ஆனால் தற்போது அது 0.1% சரிந்துள்ளது. ஜெர்மனியில் பொருட்களின் விலையேற்றமே உள்நாட்டு உற்பத்தியை வெகுவாக பாதித்துள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஆண்டுக்கு ஆண்டு தரவுகளின்படி ஜெர்மனியின் பொருளாதாரம் 0.2%வரை சரிந்தது. அந்த நாட்டில் பொருளாதார மந்தநிலையும்,ஆட்குறைப்பும் அதிகரித்துள்ளதே பிரதான காரணிகளாக கூறப்படுகிறது. மக்களிடம் வாங்கும் சக்தி குறைந்ததும் அந்த நாட்டு பொருளாதாரத்தில் குறிப்பிடத்தகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் பொருளாதார மந்தநிலையின் எதிரொலியாகவே ஜெர்மனியும் மந்தநிலையில் உள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.