10க்கு 1 ஷேர் கிடைக்கும்..
தொட்டதெல்லாம் ஹிட் ஆகும் மந்திரமும், தந்திரமும் உள்ள பங்கு உள்ளது என்றால் அது நிச்சயம் ஐடிசி பங்குகளாகத்தான் இருக்கிறது.இந்த நிறுவனத்தின் பங்குகளை தனியாக மாற்ற ஐடிசி நிறுவன இயக்குநர்கள் குழு புதிய உத்தியை கையில் எடுத்துள்ளனர். இதன்படி ஐடிசி நிறுவனத்தின் பங்குகளை வைத்திருக்கும் நபர்களுக்கு 10-ல் ஒரு பங்கு ஷேரை ஐடிசி ஹோட்டல்ஸ் பெயரில் தர முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது 10 ஐடிசி பங்குகள் இருப்போருக்கு 1 ஐடிசி ஹோட்டல்ஸ் பங்குகள் அளிக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. தற்போது வரை தனியாக பங்குச்சந்தையில் களமிறங்குவதற்கான பணிகளை ஐடிசி ஹோட்டல்ஸ் பிரிவு செய்து வருகிறது.இது அடுத்த 15 மாதங்களில் நிறைவடைந்து ஐடிசி ஹோட்டல்ஸ் பங்குகள் பங்குச்சந்தைக்கு வந்துவிடும் இதற்காக பங்கு வைத்திருப்போர்,செபி,தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் உள்ளிட்டோரின் ஒப்புதல் பெறவேண்டியிருக்கிறது.அதாவது ஐடிசி ஹோட்டல்ஸ் தனி பங்காக மாறும்பட்சத்தில் 100 பங்குகள் விற்பனை செய்ய முடிவு செய்தால் அதில் 40 பங்குகள் ஐடிசி நிறுவனமே வைத்துக்கொள்ளும் ,மீதமுள்ள 60 பங்குகளை சந்தையில் விற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.ஐடிசி ஹோட்டல்ஸ் பிரிவு அதன் தாய் நிறுவனமான ஐடிசியின் நிறுவனம் மற்றும் பிராண்ட் பெயர்களை எந்த அனுமதியும் இன்றி பயன்படுத்த வகை செய்யப்பட்டுள்ளது. ஐடிசி நிறுவனத்தில் தற்போது வரை ஹோட்டல்ஸ் பிரிவு 20 விழுக்காடு நிதி முதலீடு பெற்று வருகிறது. அதேநேரம் 2%மட்டுமே லாபமாக தந்து வருகிறது.அதாவது ஹோட்டல்ஸ் பிரிவில் 2,573 கோடி ரூபாய் வருவாய் வருகிறது.புகையிலை விற்பனை நிறுவனம் என்ற அவப்பெயரில் இருந்து மீள பல தரப்பினரும் தனியாக வியாபாரத்தை செய்ய ஐடிசி நிறுவனத்துக்கு அறிவுறுத்தினர்.கூட்டு குடும்பமாக இருக்கும் ஐடிசி நிறுவனம் ஐடிசி ஹோட்டல்ஸ் என்ற தனிக்குடித்தனம் சென்றால்தான் கூட்டுக்குடும்பம் வளரும் என்ற நிலை இருக்கும் நிலையி்ல் இதுவும் நல்லதுதான் என்கிறார்கள் நிபுணர்கள், ஜூன் வரையிலான காலாண்டு தரவுகளின்படி ஐடிசி நிறுவனத்தில் ஹோட்டல்கள் துறை மட்டும் 8.1%வளர்ச்சியை எட்டியுள்ளது.இந்த காலகட்டத்தில் மட்டும் ஐடிசி புதிதாக 6 ஹோட்டல்களை கட்டி வருவது குறிப்பிடத்தக்கது.