காப்பீட்டு தொகையை வாங்கிகோங்க!!!
ஒடிசாவில் கடந்த வெள்ளிக்கிழமை 3 ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் 275க்கும் அதிகமானோர் மாண்டுபோயினர். இவர்களுக்கு தேசமே அஞ்சலி செலுத்தி வருகிறது. இந்த நிலையில் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்கள் எல்ஐசி காப்பீட்டுத் தொகையை பெற ஏதுவாக சில விதிகளை எல்ஐசி தளர்த்தியுள்ளது. இறப்புசான்றிதழ்,காவல்துறை தரவுகள்,ரயில்வே அறிவித்துள்ள உயிரிழந்தோரின் பட்டியல் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை சமர்பித்து எல்ஐசி காப்பீட்டுத் தொகையை பெற்றுக்கொள்ளலாம் என்று எல்ஐசி அறிவித்துள்ளது. 022-68276827 என்ற எண்ணில் தொடர்புகொண்டு சந்தேகங்களை கேட்கலாம் என்றும் எல்ஐசி அறிவித்துள்ளது. விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு எவ்வளவு விரைவாக காப்பீட்டுத் தொகை தரமுடியுமோ அத்தனை விரைவாக தர பணிகள் நடப்பதாகவும் எல்ஐசி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். துயரமான நேரத்தில் ரத்தம் தர தயாராக இருந்த ஒடிசா இளைஞர்கள் உண்மையிலேயே பாராட்டுக்கு உரியவர்கள்தான். பெருந்துயர் நேரிட்டபோதும் மரித்துப்போகாத மனிதம் காப்போம்.