எங்களுக்கு கொஞ்சம் சலுகை கொடுங்களேன்!!
பட்ஜெட்டில் என்னவெல்லாம் தேவை என்பதை பட்டியலெடுக்கவே நிதியமைச்சகம் பம்பரமாக சுழன்று வருகின்றனர். இந்த சூழலில் தங்களுக்கு என்னவெல்லாம் தேவை என்பது பற்றி ஆலோசனை நடத்தப்பட்டது . தொலைதொடர்புத்துறையில் தற்போதுள்ள அனுமதி கட்டணத்தை குறைக்கவும், 32 ஆயிரம் கோடி ரூபாய் அரசு தங்களுக்கு வழங்க வேண்டும் என்றும் தொலைதொடர்பு நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது வரை உரிமத் தொகை 8 % எனும் நிலையில உள்ளது. இதனை சமாளிக்க அரசு உதவிட வேண்டும் என்றும் கோரியுள்ளனர். இதேபோல் உள்ளீட்டு பிரிவு வரியையும் குறைக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 5ஜி சேவையை விரிவுபடுத்த தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக இருக்கும் சூழலில் வரும் பட்ஜெட் நாடு முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.