“கோட்ரேஜ்” – கஷ்ட காலத்துலயும், பலே வளர்ச்சி!
உள்நாட்டுச் சந்தையில் வலுவான வளர்ச்சிக்கான எதிர்பார்ப்பு, சர்வதேச சந்தைகளில் ஏற்பட்ட மீட்சி, ஒரு புதிய தலைமை நிர்வாக அதிகாரியின் நியமனம் போன்ற காரணங்களால் கடந்த மூன்று மாதங்களில் கோட்ரேஜ் கன்ஸ்யூமர் தயாரிப்புகளின் பங்குகளில் ஒரு அதீத வளர்ச்சிக்கு வழிவகுத்துள்ளது. மே மாத தொடக்கத்தில் இருந்து, கடந்த மாதம் ரூ.1-டிரில்லியன் சந்தை மூலதனத்தை எட்டிய பங்கு, 40 சதவீதம் அதிகரித்துள்ளது. அதன் பங்குச் சந்தை குறியீட்டெண் (பிஎஸ்இ எஃப்எம்சிஜி – BSE-FMCG) மற்றும் பெஞ்ச்மார்க் (நிஃப்டி50 – NIFTY50) மூன்று மாத காலத்தில் மிகச்சிறப்பாக செயல்பட்டு நான்கு மடங்கு ஆதாயங்களுடன் கூர்மையான வளர்ச்சியை எட்டி உள்ளது. ஜூனில் முடிவடைந்த (22 ஆம் நிதியாண்டின்) முதல் காலாண்டில் செயல்திறன் மற்றும் வளர்ச்சிக் கண்ணோட்டத்தின் அடிப்படையில் சிறு தவறும் நிகழாமல் இந்த வளர்ச்சி சாத்தியமாகி இருக்கிறது.
கடந்த காலாண்டுடன் ஒப்பீட்டு அளவில் பார்க்கும் போது வளர்ச்சி எதிர்பார்த்ததை விட சிறப்பானதாக 24.4 சதவிகிதம் என்ற அளவை எட்டி இருக்கிறது. உள்நாட்டு வணிகத்தில் 15 சதவிகித அளவு வளர்ச்சி, தனிப்பட்ட மற்றும் வீட்டு பராமரிப்பு பிரிவுகளுடன் (17-21 சதவீதம்) வளர்ச்சி அளவில் தனித்து நிற்கும் மேல்வரிசை நிலையை எட்டியிருக்கிறது. இரண்டு வருட கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதம் (சிஏஜிஆர்) அடிப்படையில் பார்த்தால் கூட, உள்நாட்டு சந்தையில் 12 சதவீத வளர்ச்சி என்பது உள்நாட்டு மற்றும் தனிப்பட்ட பராமரிப்பு வணிகங்களில் உள்ள சக போட்டியாளர்களிடையே மிக உயர்ந்ததாகும்.
நிறுவனத்தின் உள்நாட்டு சந்தை வருமானம் 57 சதவிகிதத்தை எட்டியிருக்கிறது. வீட்டு உபயோகப் பொருட்களின் பூச்சிக்கொல்லிகள் பிரிவானது இதில் 80 சதவிகித வருமானத்தை ஈட்டிக் கொடுத்திருக்கிறது. இரட்டை இலக்கத்தில் வளர்ச்சி மற்றும் குறிப்பிட்ட சில தயாரிப்புகளில் (ஏரோசால், எலெக்ட்ரிக், நான் மஸ்க்கிட்டோ) மிகப்பெரிய டிமாண்டை ஏற்படுத்தி இருக்கிறது. சட்டவிரோதமான கொசுவத்திச் சுருள்களை சமாளிக்கும் வகையில் நிறுவனம் மகாராஷ்ட்ராவில் “குட்நைட் ஜம்போ ஃபாஸ்ட் கார்டை” அறிமுகப்படுத்தியது.
குளியல் பொருட்கள் மற்றும் உயர் சுகாதாரத் தயாரிப்புகளும் இரட்டை இலக்க வருவாய் வளர்ச்சியைக் கண்டது, ஒற்றை இலக்கத்தில் உயர்த்தப்பட்ட இந்தப் பொருட்களின் விலையானது இந்த வருவாய் வளர்ச்சிக்கு உதவிகரமாக இருந்தது. சோப்புகளின் பிரிவில் மிகப்பெரிய சந்தை இடத்தைப் பெற முடிந்தது. விளம்பரங்களுக்கு செலவிடப்பட்ட தொகையானது ஹேண்ட் வாஷ் பிரிவில் உறுதியான வளர்ச்சிக்கு உதவியது. ஹேர் கலர் பிரிவானது ஜூன் மற்றும் ஜூலையில் சிறப்பான வளர்ச்சி கண்டது.
ஊரடங்கு காலத்தின் அடிப்படையில் இந்த வளர்ச்சியானது நிலைகொண்டிருந்தது. பன்னாட்டு வணிகத்தைப் பொறுத்தவரை ஆப்பிரிக்காவில் நான்காவது காலாண்டாக நிறுவனம் இரட்டை இலக்கு வளர்ச்சியைக் கண்டிருக்கிறது. இந்தோனேசியாவில் நிறுவனத்தின் வளர்ச்சி ஏமாற்றமளிக்கிறது. கோவிட் பெருந்தொற்றுக் காரணமாக இந்த வளர்ச்சி தடைப்பட்டிருக்கலாம்.
கோட்ரேஜ் நிறுவனத்தின் வருமான வளர்ச்சி குறித்து ஜெ.எம் பைனான்சியல் நிறுவனத்தின் ரிச்சர்ட் லியு மற்றும் விக்கி பஞ்சாபி இருவரும் கூறுகையில் இரண்டு முக்கியமான காரணிகள் இந்த வளர்ச்சிக்குப் பின்புலமாக இருக்கின்றன. இந்தியாவும், ஆப்ரிக்காவும் வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் தனி சுகாதார பொருட்களின் மீதான நிலையான வளர்ச்சியை வெளிப்படுத்தி இருப்பது நேர்மறையான விளைவுகளை உருவாக்கி இருக்கிறது என்றும், வருமான வளர்ச்சியானது உறுதியாக இருக்கும் போது நிறுவனம் சிறப்பாகச் செயல்படுவதற்கான சூழல் இருக்கும், அது இயக்கத்தின் சராசரி லாபத்தை விட கூடுதல் திறனோடு செயல்பட முடியும் என்றும், மூலப்பொருட்களின் மீதான பணவீக்கம் மிகப்பெரிய அளவில் உயர்ந்த சூழலில், 210 புள்ளிகள் அளவில் மொத்த இடைவெளி குறைந்தாலும் கூட நிறுவனம் இயக்க சராசரியில் 40 கூடுதல் புள்ளிகளோடு 20.7 என்ற வளர்ச்சி நிலையை எட்டி இருக்கிறது.
உலகளாவிய இந்த வளர்ச்சியானது நிறுவனத்தின் பங்குகளை வேகப்படுத்தி விலை அதிகரிக்கச் செய்திருக்கிறது, என்று ஹிமான்ஷு நய்யார் தலைமையிலான எஸ் செக்யூரிட்டிஸ் நிறுவனத்தின் ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். போர்ட்போலியோவில் கூடுதலாக சேர்க்கப்பட்ட வீட்டில் உபயோகப்படுத்தும் பூச்சிக்கொல்லிகள் மற்றும் ஹேர் கலர், லாபம் குறைந்த சில பன்னாட்டு தயாரிப்புகளைக் கைவிட்டது மற்றும் புதிய தலைமை போன்றவை நிறுவனத்தின் உறுதியான வளர்ச்சிக்கு ஒரு வகையில் உதவி இருக்கிறது.
பெரும்பாலான பங்குச் சந்தை ஆய்வாளர்கள், நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதற்குப் பரிந்துரை செய்தாலும், பங்கின் விலைக்கான இலக்கை 1034 ரூபாய் என்று வைத்திருக்கிறார்கள். பங்கின் இப்போதைய விலையில் இருந்து சிறிது ஏற்றம் காணப்படலாம், முதலீட்டாளர்கள் சந்தையின் திருத்தங்களுக்காகக் கொஞ்சம் பொறுமை காக்க வேண்டும், 23 ஆவது நிதியாண்டின் மதிப்பீட்டை விட 44 மடங்கில் பங்கு தற்போது விற்பனையாகிறது.