வங்கி அல்லாத கடன் வழங்கும் வணிகம்.. – கோத்ரேஜ் ஃபைனான்ஸ் திட்டம்..!!
124 ஆண்டுகள் பழமையான கோத்ரேஜ் குழுமம், கோத்ரேஜ் ஃபைனான்ஸ் லிமிடெட் வணிகத்தில் நுழைய உள்ளது என்று பெயர் குறிப்பிட விரும்பாத ஒருவர் கூறினார்.
ரூ.1,000 கோடி பங்கு மூலதனத்தைக் கொண்ட கோத்ரெஜ், சிறு நிறுவனங்களுக்கு அடமானம் அல்லாத கடன்கள் மற்றும் சொத்துக்கு எதிரான கடன்களுடன் தொடங்கப்படும் என்று அவர் தெரிவித்தார். இது பின்னர் நுகர்வோர் கடனுக்குள் நுழையலாம் என்றும் கூறப்படுகிறது.
அக்டோபர் 2020-இல், குழு கோத்ரேஜ் ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தை அறிமுகப்படுத்தியது. இது ரூ.40 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை அடமானக் கடன்களை வழங்குகிறது,
ஜூலை 2021-இல், இந்திய ரிசர்வ் வங்கியின் ஒப்புதலைத் தொடர்ந்து, கோத்ரேஜ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், கோத்ரெஜ் ஹவுசிங் ஃபைனான்ஸ் மற்றும் கோத்ரெஜ் ஃபைனான்ஸ் ஆகியவற்றின் பங்குகளை கோத்ரெஜ் கேப்பிட்டலுக்கு மாற்றியது.
கோத்ரேஜ் குழுமம் 1897-இல் நிறுவப்பட்டது. அப்போது சகோதரர்கள் அர்தேஷிர் மற்றும் பிரோஜ்ஷா கோத்ரேஜ் மும்பையில் ஒரு பூட்டு தயாரிக்கும் தொழிலை நிறுவினர். பின்னர் இது ஒரு உலகளாவிய கூட்டு நிறுவனமாக உருவெடுத்துள்ளது.