கணக்கு பார்க்க போறாங்க!!!.
இந்தியாவில் பெரிய கார்பரேட் நிறுவனங்கள் முதல் காய்கனி கடைவரை எல்லா இடங்களிலும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்கான வசதிகள் உள்ளன. இந்த நிலையில் இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரம் எவ்வளவு என்று அடுத்த 9 மாதங்களில் கணக்கிட இருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுவரை தனிநபர் நிறுவனங்கள் மட்டுமே இந்த பொருளாதாரத்தை கணித்து வந்தது. இந்த நிலையில், அரசாங்கமே இனி கணக்கிட இருக்கிறது. கூகுளின் கணிப்புப்படி இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரம் 2030-இல் 1 டிரில்லியன் டாலராக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. எத்தனை பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைத்தன, எவ்வளவு பரிவர்த்தனைகள் உள்ளிட்டவை குறித்து இந்த டிஜிட்டல் பொருளாதாரத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.2015-இல் டிஜிட்டல் இந்தியா திட்டம் தொடங்கப்பட்டது. டிஜிட்டல் பொருளாதாரம் குறித்து தற்போது நடைமுறையில் உள்ள கணக்கிடும் முறையைவிட புதிய நுட்பங்களை இந்த கணக்கெடுப்புக்கு தயார் செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை கண்காணிக்கவும் திட்டத்தையும் மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.முதலீடுகள், வேலைவாய்ப்புகள், தொழில் முனைகள் குறித்தும், ஃபின்டெக்,டிஜிட்டல் உள்கட்டமைப்பு மற்றும் மின்னணுவியல் துறை குறித்தும்வளர்ச்சியை ஏற்படுத்த இந்த டிஜிட்டல் கணக்கெடுப்பு நடத்தப்பட இருக்கிறது.