தங்கம்.! தங்கம்..!! தங்கம்!!!
தங்கத்தை இறக்குமதி செய்வதில் இந்தியா கடந்த 32 மாதங்களில் குறைந்த அளவை பதிவு செய்துள்ளது உங்களுக்கு தெரியுமா. ஆம், நீங்கள் கேட்டது சரிதான், இந்தியாவில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனை மேலும் உயர்த்த பட்ஜெட்டில் நிதியமைச்சர் அறிவிப்பை வெளியிட்டார். இதன் காரணமாக தங்கம் இதுவரை இல்லாத புதிய உச்சங்களை தொட்டது. இந்த நிலையி்ல் கடந்த ஜனவரி மாதம் மட்டும் வழக்கமாக செய்யும் இறக்குமதியைவிட 76% குறைவாக தங்கத்தை இந்தியா இறக்குமதி செய்துள்ளது. இறக்குமதி வரி உயர்வை காரணம் காட்டி, தங்க நகை வியாபாரிகள் வெளிநாடுகளில் இருந்து தங்கத்தை இறக்குமதி செய்ய தயக்கம் காட்டி வருகின்றனர். இது ஒரு பக்கம் பாதகமாக பார்க்கப்பட்டாலும், இந்தியாவின் வணிக பற்றாக்குறையை சரிசெய்யும் விதமாகவும் மாறியுள்ளது. இதன் காரணமாக இந்திய ரூபாயின் மதிப்பு உயரும் என்றும் நிபுணர்கள் கருதுகின்றனர். ஆண்டுதோறும் ஜனவரியில் அதிகப்படியான தங்கத்தை வெளிநாடுகளில் இருந்து இந்தியா இறக்குமதிசெய்யும், கடந்த 2022 ஜனவரியில் 45 டன் தங்கத்தை இந்தியா இறக்குமதி செய்தது. ஆனால் 2023 ஜனவரியில் வெறும் 11 டன் தங்கம் மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டது. பிப்ரவரி கடைசி வாரத்தில் இருந்து ஏராளமான திருமணங்கள் இந்தியாவில் நடைபெற உள்ளதால் இந்தியாவின் தங்கம் இறக்குமதி அதிகரிக்கும் என்று நகை வணிகர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.