ஆட்டம் போட்ட தங்கம் அடங்கியது..
இஸ்ரேல்-ஈரான் இடையே நிலவிய போர்ப்பதற்றம் காரணமாக அமெரிக்கா மட்டுமின்றி கடந்த சில வாரங்களுக்கு முன்பு தங்கம் விலை புதிய உச்சமாக இந்தியாவில் ஒரு சவரன் 55 ஆயிரம் ரூபாயை கடந்தது. இந்நிலையில் அந்த போர்ப்பதற்றமும் தணிந்துவிட்டது. அமெரிக்க பெடரல் ரிசர்வ் கடன்கள் மீதான வட்டி விகிதத்தை குறைக்கும் என்ற தகவல் நடக்காமலேயே போய்விடும்போல இருக்கிறது என்ற நிலையும் தற்போது தங்கத்தின் மதிப்பை குறைத்திருக்கின்றன. சரிவ்தேச அளவில் கடந்த சில நாட்களுக்கு முனஅபு 2448 டாலர் என்ற புதிய உச்சத்தில் இருந்த ஒறு டிராய் அவுன்ஸ் தங்கம் விலை தற்போது 2349 டாலர்களாக சரிந்திருக்கிறது. கடந்த 5 வாரங்களாக உச்சத்தில் இருந்த தங்கம் விலை சற்று சரிய பிரதான காரணமே அமெரிக்க பெடரல் ரிசர்வ்வின் கிடுக்கிப்பிடிதான் என்று கூறப்படுகிறது. தொடர்ந்து அமெரிக்காவில் அதிக வட்டி விகிதம் நிலவி வந்தால் தங்கம் விலை குறையவே செய்யும். அமெரிக்க டாலர்கள் மற்றும் அந்நாட்டு கடன் பத்திரங்கள் மீது முதலீடுகள் அதிகரிக்கும்போது தங்கத்தின் விலை குறைவது இயல்பான ஒன்று என்பதால் பலரின் கவனம் தற்போது தங்கத்துக்கு பதிலாக அமெரிக்க டாலர்கள் மற்றும் கடன் பத்திரங்கள் பக்கம் திரும்பியுள்ளது. தங்கத்தின் மீதான மதிப்பு குறைந்து வருவதால் வரும் நாட்களில் சர்வதேச அளவில் தங்கம் 2260 டாலராக கூட குறையவே வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. சர்வதேச அளவில் தங்கம் விலை குறைந்தால் தானாகவே இந்தியாவிலும் , குறிப்பாக தமிழ்நாட்டிலும் தங்கம் விலையும் குறையவே அதிக வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் கணித்திருக்கின்றனர். குறையுமா தங்கம் பார்ப்போமே..