மீண்டும் வந்துவிட்டது தங்க முதலீட்டு பத்திரம்
தங்கத்தை கடைகளில் வாங்குவதை விடவும் ரிசர்வ் வங்கியே விற்கும்போது வாங்குவது மிகச்சிறந்த பலனை தரும். குறிப்பாக அண்மையில் வெளியிடப்பட்ட தங்க பத்திர திட்டங்களுக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது. இந்த நிலையில் இரண்டாவது பாகமாக தங்க முதலீட்டு பத்திரங்களை ரிசர்வ்வங்கி அறிவித்துள்ளது. செப்டம்பர் 11 முதல் 15ஆம் தேதி வரை தங்கத்தை பொதுமக்கள் பத்திரமாக வாங்கிக்கொள்ள இயலும் ஒரு கிராம் தங்கப்பத்திரத்தின் விலை 5,923 ரூபாயாக உள்ளது.
செப்டம்பர் 6,7,8ஆகிய தேதிகளில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.வழக்கமான தங்கத்தைவிட இந்த தங்கத்தை ஆன்லைனில் முதலீடு செய்தால் கிராமுக்கு 50 ரூபாய் தள்ளுபடி கிடைக்க இருக்கிறது 8 ஆண்டுகள் வரை இந்த தங்க முதலீட்டு பத்திரத்தில் முதலீடு செய்ய இயலும். வங்கிகள், பங்குச்சந்தை நிறுவனங்கள் வாயிலாக இந்த தங்கத்தை வாங்கிக்கொள்ள இயலும். இதற்கு ரெஜிஸ்டர் செய்ய இந்த படிகளை பின்பற்றுங்கள்
*பாரத வங்கியின் வங்கிக்கணக்கில் லாகின் செய்யவும்.
*அதில் இ-சேவை என்ற பகுதியில் சாவரின் கோல்ட் ஸ்கீம் என்ற திட்டத்தை செலக்ட் செய்யவும்.
விவரங்களை உள்ளீடு செய்து பின்னர் சமர்பிக்க வேண்டும். டிபி அல்லது கிளையண்ட் ஐடியை வைத்து தரவுகளை சரி பார்த்த பிறகு தங்கத்தை வாங்கிக்கொள்ளலாலம்.. வரும் 15ஆம் தேதி வரை இந்த திட்டம் அமலில் இருக்கும்.