42 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை
சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு 328 ரூபாய் உயர்ந்து 41 ஆயிரத்து 528 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் 5ஆயிரத்து 191 ரூபாயாக விற்கப்பட்டது. ஒரு கிராம் தங்கம் 41 ரூபாய் உயர்வை கண்டது. இதேபோல வெள்ளி விலையும் கிடு கிடுவென உயர்ந்து ஒரு கிராம் 75 ரூபாய் 50 காசுகளாக விற்பனையானது. கட்டி வெள்ளி விலையும் ஒரு கிலோ ஆயிரம் ரூபாய் விலை உய்ர்ந்தது. 75 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு சவரன் தங்கம் சந்தையிலேயே 42 ஆயிரத்தை நெருங்கும் சூழலில் ,செய்கூலி, சேதாரம் மற்றும் ஜி எஸ்டி உள்ளிட்டவற்றை சேர்த்தால் இன்னும் விலை அதிகரிக்கும் என்பதால் நடுத்தர குடும்ப மக்கள் பெரிதும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.