தொடர்ந்து சரியும் தங்கம் விலை
அமெரிக்காவில் தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது.அந்த நாட்டில் பெடரல் ரிசர்வ் வங்கி வெளியிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட கடன்கள் மீதான வட்டி விகிதம் குறைப்பு கடைசி வரை நடக்கவே இல்லை. இந்நிலையில் அதற்கு பதிலாக அமெரிக்க வேலைவாய்ப்பு குறித்த தகவல் மிகுந்த ஆவலை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் காரணமாக தங்கத்தின் மீதான விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. ஒரு அவுன்ஸ் தங்கம் விலை திங்கட்கிழமை நிலவரப்படி 0.2 விழுக்காடு சரிந்துள்ளது. மார்ச் மாதத்தின் பணவீக்க அறிக்கையை அடிப்படையாக கொண்டு அமெரிக்க பெடரல் ரிசர்வ் தனது வட்டி குறைப்பை கைவிட்டிருப்பதாக கூறப்படுகிறது. அமெரிக்காவில் கடன்கள் மீதான வட்டி 5.25 முதல் 5.50 விழுக்காடாக இருக்கிறது. அதிக வட்டி காரணமாக மக்கள் தங்கத்தின் மீது முதலீடுகளை தவிர்த்து வருகின்றனர். மத்திய கிழக்கு நாடுகளில் போர்ப்பதற்றம் குறைந்திருக்கும் இந்த நேரத்தில் அமெரிக்காவும் வட்டி குறைப்பு பற்றி பேசாமல் உள்ளது. தற்போது தங்கம் விலை சரிந்திருந்தாலும் வருங்காலங்களில் கணிக்கவே முடியாத அளவுக்கு தங்கம் விலை உச்சம் தொடும் என்று ராய்ட்டர்ஸ் நிறுவன கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தங்கத்தின் விலை 2.2 விழுக்காடு குறைந்திருக்கிறது.
மார்ச் மாத தரவுகளின்படி தங்கம் விலை 2.7 விழுக்காடு, வெள்ளி விலை 0.1 விழுக்காடு மற்றும் பிளாட்டினம் 2.1விழுக்காடும், பலாடியம் 1.3 விழுக்காடும் விலை உயர்ந்துள்ளன.