இன்று (02-08-2022) சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை

தங்கத்தின் விலையில் தொடர்ந்து கடந்த சில வாரங்களாகவே ஏற்ற இறக்கங்கள் ஏற்பட்டு வருகின்றது. கடந்த 31ம் தேதி ஒரு சவரன் தங்கம் 38 ஆயிரத்து 520 ரூபாயாக இருந்தது. அதேசமயம் நேற்று 160 ரூபாய் குறைந்து 38 ஆயிரத்து 360 ரூபாய்க்கு விற்பனையானது.
இந்நிலையில், இன்று (02-08-2022) சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி, ஒரு சவரன் தங்கத்தின் விலை 200 ரூபாய் உயர்ந்து 38 ஆயிரத்து 560 ரூபாயாக அதிகரித்துள்ளது. ஒரு கிராம் தங்கத்தின் விலை 25 ரூபாய் உயர்ந்து 4 ஆயிரத்து 820க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் அதிகரித்து 63 ரூபாய் 60 காசுகளுக்கும், ஒரு கிலோ 63 ஆயிரத்து 600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.