நல்லா சம்பாதிக்கும் எண்ணெய் நிறுவனங்கள்..!!!
இந்திய எண்ணெய் நிறுவனங்கள்,கடந்த சில மாதங்களாக கொள்ளை லாபத்தை பதிவு செய்து வருகின்றன.ஆனால் மத்திய அரசு எரிபொருள் மீதான வரிகளை குறைக்க முன்வரவில்லை என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஒவ்வொரு லிட்டர் எரிபொருளுக்கும் 10 ரூபாய் அளவுக்கு எண்ணெய் சந்தைபடுத்தும் நிறுவனங்கள் பெறுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். சர்வதேச அளவில் நிலவிய கச்சா எண்ணெய் விலையேற்றத்தை சமாளிக்கும் வகையில் பெட்ரோல்,டீசல் விலையை மத்திய அரசு குறைத்து 1ஆண்டுக்கும் மேல் ஆகிறது.பெட்ரோல் ,டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இத்தனை நடந்தும் பெட்ரோல்,டீசல் மீதான வரியை குறைக்க மத்திய அரசு முன்வரவில்லை. நடப்பு நிதியாண்டில் மட்டும் அரசுக்கு சொந்தமான இந்தியன் ஆயில்,எச்பி, பாரத் பெட்ரோலியம் ஆகிய 3 நிறுவனங்களும் 1லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு லாபம் பெற்றுள்ளன. 2017-22 காலகட்டத்தில் இந்த வருவாய் சராசரியாக ஆண்டுக்கு 60,000கோடி ரூபாயாக இருந்தது. மத்திய அரசின் 3 எண்ணெய் நிறுவனங்களும் லிட்டர் ஒன்றுக்கு 8 முதல் 9 ரூபாய் லாபத்தை பெற்று வருகின்றன. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 94 டாலராக இருக்கிறது. மே 2022 முதல் இந்த விலை பெரிய மாற்றம் காணாமல் இருக்கிறது.சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தபோது இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு பெரிய இழப்பு ஏற்பட்டது உண்மைதான் என்று கூறும் நிபுணர்கள்,சந்தையில் தற்போது கச்சா எண்ணெய் குறைந்துள்ளதால் லிட்டருக்கு 10 ரூபாய் வரை எண்ணெய் நிறுவனங்களுக்கு லாபம் கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனை மத்திய அரசு நினைத்தால் சாதாரண பொதுமக்களுக்கு குறைத்து வழங்கலாம் என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.. 2014முதல் 2016 வரை மட்டும் கச்சா எண்ணெய் மீதான கலால் வரி 9 முறை இந்தியாவில் உயர்த்தப்பட்டுள்ளது. 2021நவம்பரில் பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 5 ரூபாயும்,டீசல் மீதான கலால் வரி 10ரூபாயும் குறைப்பதாக அறிவிக்கப்பட்டது. கடந்தாண்டு மே மாதத்தில் டீசலுக்கு லிட்டருக்கு 8 ரூபாயும், பெட்ரோலுக்கு 6 ரூபாயும் விலை குறைக்கப்பட்டது. 2019 முதல் 2021வரை மட்டும் பெட்ரோல்,டீசலில் கிடைக்கும் வரி மூலமாக மத்திய அரசுக்கு 8லட்சத்து 2 ஆயிரம் கோடி ரூபாய் வரி வருவாய் கிடைத்திருக்கிறது. வெளிநாடுகளில் இருந்து குறைந்தவிலையில் கிடைக்கும் கச்சா எண்ணெய்களை தேடிப்பிடித்து வாங்கியதன் மூலம் மத்திய அரசுக்கு 5,000கோடி ரூபாய் மிச்சமாகியுள்ளது.
நடப்பு நிதியாண்டின் 3 ஆவது காலாண்டில் கச்சா எண்ணெய் விலை மேலும் குறைய அதிக வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஓபெக் பிளஸ் எனப்படும் எண்ணெய் உற்பத்தி நாடுகள் தங்கள் உற்பத்தியை குறைப்பதாக அறிவித்துள்ளதால் மக்களுக்கு மத்திய அரசு தர இருந்த பலன்கள் கிடைக்காமல் போவதாகவும் கூறப்படுகிறது.