6 கோடி பேருக்கு மகிழ்ச்சியான செய்தி…
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியான பிஎஃப் வட்டி விகிதத்தை 0.05 விழுக்காடு உயர்த்தி அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பி எஃப் வட்டி விகிதம் என்பது 2023 நிதியாண்டுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியின் வட்டியினை உயர்த்துவது குறித்து அறங்காவலர் குழு உறுப்பினர்கள் கூடி ஆலோசனை நடத்துவது வழக்கம். அப்படி இந்த குழு பிஎஃப் வட்டி விகிதம் உயர்த்த தொழிலாளர் நலத்துறை அமைச்சகத்துக்கு பரிந்துரைக்கும். இந்த பரிந்துரை பின்னர் மத்திய நிதியமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். இறுதியாக நிதியமைச்சகம் பி.எப் வட்டி விகிதம் உயர்த்துவது குறித்து முடிவு செய்யும். இந்த செயல்கள் முடிந்து தற்போது வட்டி விகிதம் 0.05விழுக்காடு உயர்த்தப்பட்டுள்ளது. இந்தியாவில் பிஎப் வட்டி விகிதத்தால் 6 கோடி பேர் பயனடைய இருக்கின்றனர். கடந்த 2021-2022 நிதியாண்டில் இதே வட்டி விகிதம் 8.1 விழுக்காடாக குறைக்கப்பட்டிருந்தது. இது கடந்த 40 ஆண்டுகளில் மிகவும் குறைவான விகிதமாகும்.இந்த வட்டி விகிதம் உயர்த்தப்பட்டதால் மத்திய அரசுக்கு கூடுதல் செலவு அதிகரிக்கும் மேலும் தற்போதுள்ள பிஎஃப் நிதி பற்றாக்குறை 3 மடங்கு வரை உயரும் என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். சந்தாதாரர்களில் சிலர் தங்களுக்குவட்டிப்பணம் கிடைக்க காலதாமதம் ஆவதாக புகார் தெரிவித்திருந்த நிலையில் இந்த முறை கடந்தாண்டுக்கான வட்டி விகிதம் குறித்த அறிவிப்பு துரிதப்படுத்தப்பட்டுள்ளது.