ஃபாரின் ரிட்டன் காரங்களுக்கு நற்செய்தி..
வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வருவோர் லேப்டாப்,டேப்லட்,கணினிகள் வாங்கி வரவும் இறக்குமதி செய்யவும் திடீர் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அந்த தடைக்கான அவகாசத்தை அடுத்தாண்டு செப்டம்பர் வரை நீட்டிக்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.தற்போது வரை இந்த வகை மின்சாதன பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய இம்போர்ட் மேனேஜ்மண்ட் சிஸ்டம் என்ற அமைப்பில் பதிவு செய்ய வேண்டியுள்ளது. 2024ஆம் ஆண்டு செப்டம்பருக்கு பிறகு இதில் பதிவு செய்தபின்னரே பொருட்களை இறக்குமதி செய்ய இயலும் .அதுவரை பொருட்களை இறக்குமதி செய்ய நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு செய்து வருகிறது. குறிப்பிட்ட திடீர் தடையால் தங்கள் சேவைகள் பாதிக்கப்படும் என்று லேப்டாப் உற்பத்தியாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்த நிலையில் ,இன்னும் ஓராண்டுக்கு நீட்டிக்கவே அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. புதிய கட்டமைப்பின்படி,இந்தியாவிற்குள் ஒரு சிறிய செல்போன் இறக்குமதி செய்தாலும் அந்த தளத்தில் பதிவு செய்யப்படவேண்டியது கட்டாயமாகும்.இந்த பதிவு முறை முற்றிலும் ஆன்லைனிலேயே செய்ய இயலும்.பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து அதனை அசம்பிள் செய்யும் நிறுவனங்களுக்கு இந்த விதி பொருந்ததாது என்றும் கூறப்படுகிறது.இந்தியாவில்பயன்படுத்தப்படும் 80 விழுக்காடுக்கும் அதிகமான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதால் அவற்றை இந்தியாவிலேயே உற்பத்தி செய்யும் நோக்கில் தடை விதிக்கப்பட்டது, ஆனால் அது பலன்தரவில்லை. லேப்டாப், கணினி மற்றும் டேப்லட் மட்டுமின்றி, பிரிண்டர்கள்,கேமிராக்கள் மற்றும் ஹார்ட் டிஸ்குகளுக்கும் இந்த கட்டுப்பாடுகள் பொருந்தும் என்று கூறப்படுகிறது.இந்தியாவில் 23 நிதியாண்டில் மட்டும் 10.8பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன.