டெஸ்லா பொறியாளர்கள் சம்பளம் உயர்த்த மஸ்க் திட்டம்..
செயற்கை நுண்ணறிவு நுட்பப்பிரிவில் டெஸ்லா நிறுவனத்தில் பணியாற்றும் பொறியாளர்களின் சம்பளத்தை உயர்த்த அதன் உரிமையாளர் எலான் மஸ்க் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள மஸ்க், தனது நிறுவனத்தில் 4 பொறியாளர்கள் வேறு நிறுவனங்களுக்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. அப்படி வெளியே சென்றவர்களை மீண்டும் டெஸ்லா நிறுவனத்திலேயே சேர்க்க முயற்சிகள் நடப்பதாகவும் கூறியுள்ளார். ரோபோட்டிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவை வெளியிலேயே உற்பத்தி செய்ய விரும்பிய மஸ்க், பின்னர் அதை டெஸ்லாவிலேயே உருவாக்கவும் முடிவெடுத்தார். சாட் ஜிபிடி வெற்றி பெற்ற உடனேயே அதற்கு போட்டியாக மஸ்க் தனது எக்ஸ் ஏஐ என்ற பெயரில் செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தை உருவாக்கினார். பெரிய தொகை கொடுத்தாவது தனது நிறுவனத்தில் பொறியாளர்களை களமிறக்க மஸ்க் திட்டமிட்டுள்ளார். டெஸ்லாவில் மிகமுக்கிய பணியாளராக இருந்த ஆந்திரேஜ் கர்பாத்தியை மஸ்க் கடந்த 2022 ஆம் ஆண்டு இழந்தார். டெஸ்லாவில் இருந்து விலகிய ஆந்திரேஜ், மீண்டும் ஓபன் ஏ.ஐ குழுவிலேயே சேர்ந்துவிட்டார். முக்கிய பிரமுகர்கள் வெளியே சென்றுவிட்டாலும் 200 அட்டகாசமான பொறியாளர்கள் தம் வசம் இருப்பதாகவும், வெற்றிப்பாதையை நோக்கி டெஸ்லா முன்னேறி வருவதாகவும் மஸ்க் குறிப்பிட்டு எக்ஸ் பதிவை செய்திருக்கிறார்.