இந்தியாவுக்கு நல்ல வாய்ப்பு – உலக வங்கித் தலைவர்..
அண்மையில் அமெரிக்க அதிபர் பைடனால் வேட்பு மனுதாக்கல் செய்ய பரிந்துரைக்கப்பட்ட மிகச்சிறந்த பொருளாதார நிபுணர் அஜய் பங்கா உலகவங்கியின் தலைவராகிவிட்டார். இவர் இந்தியாவில் நடக்க இருக்கும் ஜி20 அமைப்பு கூட்டம் குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். காந்திநகரில் உலகளவிலான நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய ரிசர்வ் வங்கி ஆளுநர்களின் கூட்டத்தை பாராட்டினார். மேலும் இந்தியாவின் டிஜிட்டல் பணப்பரிமாற்ற கட்டமைப்பின் மிகப்பெரிய ரசிகர் என்றும் அஜய் பங்கா தெரிவித்துள்ளார். உலகிலேயே வேகமாக வளரும் பொருளாதார நாடாக உள்ள இந்தியாவின் வளர்ச்சி என்பது 6.5 விழுக்காடா இருக்கலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலகவங்கி கணிப்புகளின்படி அடுத்தாண்டு சவால் நிறைந்ததாக இருக்கலாம் என்று அஜய் பங்கா சுட்டிக்காட்டியுள்ளார். கணிப்புகளை பொய்யாக்க இயலும் என்றும் அஜய் பங்கா தெரிவித்துள்ளார். ஐஎம்எப் அமைப்பு உலக பொருளாதார வளர்ச்சியை குறைத்து மதிப்பிட்டது. ஆனால் தற்போது உலகளவில் பொருளாதார சூழல் வளர்ச்சி கண்டுள்ளது. மேலும் பணவீக்கமும் குறையத் தொடங்கியிருப்பதாகவும் அஜய் பங்கா தெரிவித்துள்ளார். அமெரிக்கா மற்றும் ஸ்விட்சர்லாந்தில் அடுத்தடுத்து வங்கிகள் திவாலான நிலையில் அது பற்றி சுட்டிக்காட்டிய பங்கா, சர்வதேச நாணய நிதியத்தின் கணிப்புகள் மாற்றம் பெறும் என்றும் ஆனால் உலக வங்கியின் கணிப்பு சரியாக இருக்கிறது என்றும், உலக பொருளாதாரம் 2023ஆம் ஆண்டில் 2.1%வளர்ச்சி பெறும் என்றும் தெரிவித்தார்.