பங்குச்சந்தைகளில் நல்ல ஏற்றம்!!
ஜூலை 26ஆம் புதன்கிழமை இந்திய பங்குச்சந்தைகளில் லேசான ஏற்றம் காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு சென்செக்ஸ் 351 புள்ளிகள் உயர்ந்து 66ஆயிரத்து 707 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 97 புள்ளிகள் அதிகரித்து 19778புள்ளிகளில் வர்த்தகம் முடிந்தது. அமெரிக்க பெடரல் ரிசர்வின் முடிவை எதிர்நோக்கி காத்திருப்பதால் இந்திய சந்தைகளில் சாதகமான சூழல் காணப்பட்டது. ஜூனுடன் முடிந்த காலாண்டில் 46.5% லாபத்தை அதிகம் பதிவு செய்த L&T நிறுவனம் 3.5% ஏற்றம் கண்டது. டாடாமோட்டார்ஸ் நிறுவனமும் தனது முதல் காலாண்டில் 3,203 கோடிரூபாய் லாபத்தை பதிவு செய்தது. ITC, Britannia Industries, Reliance Industries உள்ளிட்ட நிறுவனங்கள் லாபம் பெற்றன. Bajaj Finance, M&M, Bajaj Finserv, Tech Mahindra நிறுவன பங்குகள் சரிந்தன. TVS Motor Company, Larsen & Toubro, BHEL, Sun Pharmaceutical Industries, Hindustan Petroleum Corporation, Grasim Industries உள்ளிட்ட 200 நிறுவனபங்குகள் 52 வாரங்களில் இல்லாத அளவுக்கு ஏற்றம் கண்டன. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு 136 ரூபாய் அதிகரித்து விற்பனையானது.ஒரு கிராம் தங்கம் 17 ரூபாய் விலை உயர்ந்து 5552 ரூபாய்க்கும்,ஒரு சவரன் 44 ஆயிரத்து 416 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி விலை கிராமுக்கு 40 காசுகள் உயர்ந்து 80 ரூபாய் 40 காசுகளாக உயர்ந்தது. கட்டி வெள்ளி விலை கிலோவுக்கு 400ரூபாய் அதிகரித்து 80ஆயிரத்து 400ரூபாயாக ஏற்றம் கண்டுள்ளது(இந்த விலைகளுடன் 3%ஜிஎஸ்டி+செய்கூலி சேதாரம் தனி)