கூகுள்,அமேசானிலும் ஐ.டி. கண்காணிப்பு?
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு கூகுள்,அமேசான் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்த நிறுவனங்களுக்கு இந்தியாவிலும் கிளைகள் உள்ளன இந்த நிலையில் 5,000 கோடி ரூபாய் அளவுக்கு பணப்பரிமாற்றத்தில் வரிஏய்ப்பு நடந்ததா என்ற கோணத்தில் கண்காணிப்பை வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிரப்படுத்தியிருக்கின்றனர். குறிப்பாக விளம்பரம்,விற்பனை உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் செய்யப்பட்டுள்ள செலவுகள், அதில் பெறப்பட்ட வருமானத்துக்கான வரி முறையாக செலுத்தப்பட்டுள்ளதா என்றும் இந்திய வருமான வரித்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இதேபோல் பொதுத்துறை வங்கிகளில் 5 முதல் 10 விழுக்காடு வரை பங்குகளை விற்க மத்திய அரசு திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. Bank of India, Indian Overseas Bank, Punjab & Sind Bank, Bank of Maharashtra, Central Bank of India,UCO Bank உள்ளிட்ட வங்கிகளின் பங்குகளை விற்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது மட்டுமின்றி இந்தியாவில் உற்பத்தியாகும் மின்சார வாகனங்களில் இந்திய பொருட்களை இடம்பெற வைக்க தீவிர முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இது மட்டுமின்றி கோல்ட்மேன் சாச்ஸ் நிறுவனம் இந்திய பங்குச்சந்தையை அதிக வெயிட்டானதாக மதிப்பிட்டுள்ளது.கடந்த 2 காலாண்டுகளாக கார்பரேட் லாபம் மிக அதிகமாக உயர்ந்திருக்கிறது. நிலையான பொருளாதார வளர்ச்சி இருப்பதால் கோல்ட்மேன் சாச்ஸ் இந்த நிலைப்பாட்டை எடுத்திருப்பதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றன. இவையெல்லாம் நவம்பர் 14ஆம்தேதி பேசப்படும் முக்கியமான வணிகச் செய்திகளாகும்.