கூகுள் ஆவணங்கள் கசிவு..
கூகுள் நிறுவனத்தின் தரவுகள் கசிந்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ராண்ட் ஃபிஸ்கின் என்ற நபர் 2 ஆயிரத்து 500 பக்க தரவுகளை வெளியிட்டுள்ளார். ஏபிஐ மற்றும் அதன் ஊழியர்கள் தரவுகள் வெளியாகியுள்ளன. மார்கெட்டிங், தொழில்நுட்பம் மற்றும் பத்திரிகை துறையில் உள்ள தரவுகள் குறித்தும் ஆவணங்கள் வெளியாகியுள்ளன. தேடுதல் தரவுகள் மற்றும் அது சார்ந்த காரணிகளை கணினி எப்படி எடுத்துக்கொள்கிறது என்ற அம்சம் கசிந்துள்ளது. பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் தரவுகளை முக்கியமான அம்சங்களை பட்டியல் இடும் பணிகளை செய்வதில்லை என்று கூகுள் மறுப்பு தெரிவித்திருந்தது.
இந்நிலையில் கூகுள் நிறுவனம் பெரிய தரவுகளை எடுத்து சர்ச் இன்ஜின் ஆப்டிமைசேஷன் என்ற நுட்பத்திலும் , பட்டியலிடவும் பயன்படுத்தியது தெரியவந்தது குரோம் பயனர்கள் தரவுகள் குறிப்பாக தேர்தல் , சிறிய இணையதளங்களின் முக்கியமான தரவுகளையும் கூகுள் பட்டியலிட்டு வைத்திருப்பது தெரியவந்துள்ளது. கூகுள் நிறுவனத்தின் அல்காரிதம் எப்படி இருக்கிறது என்று அதில் வேலை பார்த்த நபரே வெளியிடுவதால் சர்ச்சை மேலும் அதிகரித்துள்ளது.