இ-சிம் பிரச்னைக்கு தீர்வு தருகிறது கூகுள் நிறுவனம்!!!
செல்போன்களை மாற்றும்போது பழைய கான்டாக்ட்களை தவறவிடாதவர்களே இல்லை என்ற அளவுக்கு பிரச்னைகள் உள்ளன. இந்த நிலையி்ல் கூகுளின் ஆண்டிராய்டு நிறுவனம் தனது புதிய நுட்பங்களை ஸ்பெயினில் உள்ள பார்செலோனா நகரில் காட்சிபடுத்தியுள்ளது. அதில் e-sim transfer வசதி பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஆப்பிள் உள்ளிட்ட நிறுவன போன்களில் இ-சிம் வசதி உள்ளன. இதே போன்ற வசதியை சாதாரண பொதுமக்களும் எளிதாக செய்யும் வகையில் இ-சிம் முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த வசதி இந்தாண்டு இறுதிக்குள் முழுமையாக மக்களுக்கு கிடைக்கும் வகையில் கூகுள் பணிகளை செய்து வருகிறது. Samsung, OnePlus, Oppo, Xiaomi வகை போன்களில் உள்ள ஆண்டிராய்டு இயங்குதலத்தில் பல புதிய அம்சங்களையும் கூகுள் புகுத்தி உள்ளது. இவை அனைத்தும் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. Nothing Phone 2,Tecno நிறுவனங்களின் புதிய வகை போன்களும் உலக மொமைல் காங்கிரஸில் காட்சிபடுத்தப்பட்டுள்ளன.