இது சுந்தரின் செயல்திட்டம்..
தமிழர்களை தலைநிமிர வைத்தவரான கூகுள் நிறுவனத்தின் சுந்தர் பிச்சை.,தாம் பணியாற்றும் கூகுள் நிறுவனத்தின் திட்டங்கள் குறித்து பேசியிருக்கிறார். கடந்த 2016ஆம் ஆண்டு முதல் செயற்கை நுண்ணறிவு நுட்பத்தில் அதிக கவனம் செலுத்தி வருவதாக குறிப்பிட்டுள்ளார். சாட் ஜிபிடியுடன் போட்டியிடும் அளவுக்கு ஏற்கனவே தாங்கள் ஒரு செயற்கை நுண்ணறிவு பாட் தயாரித்து வைத்ததாகவும் சுந்தர் குறிப்பிட்டார். தேடுபொறியையும், மின்னஞ்சலையும் பலரும் தயாரித்து வரும் நிலையில் , தாங்கள் அந்த துறையில் சிறந்து விளங்க என்ன செய்ய முடியுமோ அதை செய்வதாகவும் சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். அண்மையில் கூகுளின் செயற்கை நுண்ணறிவு நுட்பம் தவறான முடிவகளை தந்ததும், மொத்த சிஸ்டத்தையே மீண்டும் முதலில் இருந்து இயக்க ஆணையிட்டுள்ளதாக கூறியுள்ளார். அடுத்த சில ஆண்டுகளில் தரமான தயாரிப்புகளை அளிக்க ஆர்வம் காட்டி வருவதாக கூறினார். கூகுளின் தேடுபொறியில் ஒரு விஷயத்தை தேடினால் அது பல நூறு விஷயங்களை அளிப்பதால் பலவற்றை தெரிந்துகொள்ள முடியும் என்றும் கூகுள் தேடலின்போது வரும் விளம்பரத்தில் மட்டும் 300 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வருவாயாக கிடைப்பதாகவும்க தெரிவித்தார். பொதுமக்கள் தங்கள் அன்றாட பணிகளுக்கு தங்கள் தயாரிப்புகளை பயன்படுத்துவதையும் சுந்தர் பிச்சை சுட்டிக்காட்டியுள்ளார். செயற்கை நுண்ணறிவு நுட்பத்தை ஏற்றுக்கொள்ளும் வகையில் புதிய திட்டங்களையும் பிச்சை வகுத்துள்ளார். செயற்கை நுண்ணறிவு நுட்பத்தில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் முன்னணியில் இருக்கும் நிலையில் தங்கள் நிறுவனமும் அதற்கான மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக சுந்தர் விளக்கினார்.