11ம் தேதி வருகிறது கூகுளின் புதிய செல்போன்!!!!
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான ரசனை இருக்கும், கூகுள் நிறுவனத்தின் செல்போன்களை பயன்படுத்தற்கும் ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கின்றனர். அவர்களுக்காகவே கூகுள் பிக்சல் நிறுவனம் தனது 7ஏ ரக போன்களை வரும் 11ம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது. கூகுள் நிறுவனத்தின் ஐ ஓ என்ற நிகழ்ச்சி மிகவும் பிரபலமானதாகும். கூகுள் என்ன புதிய தயாரிப்புகள் கொண்டுவந்தாலும் அது இந்த நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தப்படும்.இந்தாண்டுக்கான ஐஓ நிகழ்ச்சி வரும் 10ம் தேதி நடக்கிறது. இந்தியாவில் இந்த போன்கள் அறிமுகமானதும் ஃபிளிப்கார்ட்டில் கிடைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பிக்சல்7, பிக்சல் 7 புரோ மாடல் வரிசையில் இந்த 7ஏ ரக போனும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 6.1அங்குல தொடுதிரை,full hd plus Amelod டிஸ்பிளே, 4410 எம்ஏஎச் பேட்டரி, 64 மெகா பிக்சல் முதன்மை கேமிரா,12 மெகா பிக்சல் வைட் கேமிராவும் இதன் சிறப்பம்சங்களாகும். முன்பகுதியில் 8 மெகாபிக்சல் செல்ஃபி கேமிரா இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய மதிப்பில் இந்த போனின் விலை ரூ.40,860 ரூபாயாக இருக்கும் என்று கூறப்படுகிறது. பிக்சல் 6ஏ போன்கள் தற்போது 27999 ரூபாய்க்கு ஆன்லைனில் விற்கப்படுவது குறிப்பிடத்தக்கது.