பெட்ரோல் ஏற்றுமதிக்கான வரி முழுமையாக ரத்து
டீசல் மற்றும் விமான எரிபொருள் ஏற்றுமதிக்கான விண்ட்ஃபால் வரியை அரசாங்கம் லிட்டருக்கு ரூ.2 குறைத்துள்ளது. பெட்ரோல் ஏற்றுமதிக்கான வரி லிட்டருக்கு ரூ.6 வை முழுமையாக ரத்து செய்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
மேலும் மற்ற எரிபொருட்கள் மீது விதிக்கப்பட்ட வரிகளை மூன்று வாரங்களுக்குள் திரும்பப் பெற்றுள்ளது,
மேலும் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய் மீதான வரியை 27% குறைத்து ஒரு டன் ரூ.17,000 ஆக உள்ளது. எரிபொருள் ஏற்றுமதியாளர்கள் மற்றும் எண்ணெய் உற்பத்தியாளர்களின் லாபம் குறைந்து வருவதால், சமீபத்தில் அமல்படுத்தப்பட்ட விண்ட்ஃபால் வரியை குறைப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது என்ற செய்திகளை அடுத்து இது வந்துள்ளது.
உள்நாட்டு கச்சா எண்ணெய் உற்பத்தி மீதான விண்ட்ஃபால் வரி, அரசுக்கு சொந்தமான எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தின் (ONGC) வருவாயை கடுமையாக பாதித்துள்ள நிலையில், ரிலையன்ஸ் நிறுவனத்திற்கான ஏற்றுமதி வரிகள் பீப்பாய் ஒன்றுக்கு USD 12 வரை குறைக்கலாம்,