வங்கிகளை தனியார்மயமாக்கும் மசோதா
அரசு வங்கிகளில் இணைப்பின் விளைவு குறித்து நியமிக்கப்பட்ட குழுவின் விரிவான ஆய்வுக்கு பின், அடுத்த சுற்று பொதுத்துறை வங்கி இணைப்புகளைத் தொடங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என்று நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
2019 ஆம் ஆண்டில், அரசாங்கம் 10 தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளை நான்கு பெரிய வங்கிகளாக அறிவித்தது, இதன் மூலம் பொதுத்துறை வங்கிகளின் (PSB) எண்ணிக்கையை 12 ஆகக் குறைத்தது. தற்போது, ஏழு பெரிய பொதுத்துறை வங்கிகளும், ஐந்து சிறிய வங்கிகளும் உள்ளன.
மேலும் அந்த அதிகாரி குறிப்பிடுகையில் எவ்வாறாயினும், கடந்த சில ஆண்டுகளில் அரசுக்கு சொந்தமான வங்கிகள் தங்கள் செயல்திறனை மேம்படுத்தியுள்ளன என்றும் FY22 இல் அவற்றின் லாபத்தை இரட்டிப்பாக்கியுள்ளதாகவும் கூறினார்.
வங்கிகளை தனியார்மயமாக்குவதற்கு வசதியாக திருத்தங்களைச் செய்வதற்கான மசோதா, வரவிருக்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் அரசாங்கம் அறிமுகப்படுத்த வாய்ப்புள்ளது என்றும் நிதி அமைச்சக அதிகாரி தெரிவித்தார்.