டிக்கெட் விலையை ஏற்றுவதா அரசாங்கம் எச்சரிக்கை
இந்தியாவில் கடந்த 10 ஆண்டில் அடுத்தடுத்து 3,4 விமான நிறுவனங்கள் திவாலாகியுள்ளன. இந்த நிலையில் அண்மையில் விமான போக்குவரத்து இயக்குநரகம் ஒரு புதிய சுற்றறிக்கையை விட்டனர். அதில் விமான டிக்கெட் விலை நிர்ணயம் பற்றியெல்லாம் எதுவும் தலையிட முடியாது என்று கூறப்பட்டுள்ளது. தற்போது வரை ஒரு விமான நிறுவனத்தை நடத்தவேண்டுமானால் அதில் பெரிய தொகையாக விமான எரிபொருள் விலை உள்ளது. குறிப்பிட்ட இந்த விலையை வைத்துத்தான் பல நிறுவனங்களும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு டிக்கெட் அச்சிடுகின்றனர். இந்த நிலையில், உச்சபட்ச விலைகளை நிர்ணயிக்கக்கூடாது என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பல பிரச்சனைகளில் விமான நிறுவனங்கள் சிக்கித் தவித்து வருவதாக கூறியுள்ள விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் விமான எரிபொருள் விலை, விமான நிறுவனங்களுக்கு பெரிய சிக்கலை தருவதாக கூறப்பட்டுள்ளது. அதிகபட்ச விலை நிர்ணயம் தொடர்பாக மத்திய அமைச்சரவையில்தான் முடிவெடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த முறை நடந்த கூட்டத்திலேயே விலை நிர்ணயம் தொடர்பாக பேசப்பட்டதாக கூறப்படுகிறது. எனினும் அடுத்த வாரம் நடக்க இருக்கும் கூட்டத்தில் துறைசார்ந்த அமைச்சர் மற்றும் அதிகாரிகள் கலந்துகொள்ள இருக்கிறார்கள். கோ ஏர் என்ற நிறுவனம்தான் தற்போது கோஃபர்ஸ்ட் என இயங்கி வருகிறது. இந்த சூழலில் கோஃபர்ஸ்ட் நிறுவனத்துக்கு இன்ஜின் கோளாறு பிரச்சனை உள்ளதால் அந்த நிறுவனம் டிக்கெட் வழங்குவதையும், விமான சேவையை ரத்து செய்தும் வருகின்றனர். திவால் நோட்டீல் அளித்துள்ள அந்த நிறுவனம் உள்ளே புதுமைகளை புகுத்த நினைத்து தோல்வியடைந்தது தான் மிச்சமாகும் நிர்வாக காரணங்களை கருத்தில் கொண்டு மலிவு விலையில் மக்களை பயணிக்க வைக்க நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். நிறுவனமே திவாலானதால் வரும் 19ம் தேதி வரை கோஃபர்ஸ்ட் நிறுவனத்தின் விமானங்கள் இயக்கப்படாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.