விண்ட்ஃபால் வரியை வெட்டிய அரசு…
திடீர் அதிக வருவாய் ஈட்டும் நிறுவனங்களுக்கு மத்திய அரசாங்கம் விதிக்கும் வரிக்கு பெயர்தான் விண்ட்ஃபால் டேக்ஸ். இந்த வரி விதிப்பு இந்தியாவில் கச்சா எண்ணெய் மற்றும் டீசல் மீது விதிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் உள்நாட்டிலேயே உற்பத்தியாகும் கச்சா எண்ணெய்க்கு வின்ட் பால் டேக்ஸ் விதிப்பதை மத்திய அரசே தீர்மானித்து வருகிறது. இந்த நிலையில் உள்நாட்டில் உற்பத்தி செய்துள்ள கச்சா எண்ணெய் மற்றும் டீசல் மீதான வரியை மத்திய அரசு குறைத்திருக்கிறது. ஒரு டன்னுக்கு 9,800 ரூபாயாக இருந்த வரி குறைக்கப்பட்டு 6300 ரூபாயாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நிதி அமைச்சகம் அதிகாரபூர்வ அறிவிப்பை கசெட் எனப்படும் அரசிதழில் வெளியிட்டுள்ளனர். இதனால் டீசல் மீதான லெவி லிட்டருக்கு 2 ரூபாயில் இருந்து 1 ரூபாயாக குறையும் என்றும் அறிவிக்கப்பட்டது. பெட்ரோல் மற்றும் விமான எரிபொருள் ஏற்றுமதிக்கு வரி ஏதும் கூடுதலாக விதிக்கப்படவில்லை. மாற்றி அமைக்கப்பட்ட புதிய விண்ட் ஃபால் டாக்ஸ் முறை கடந்த 16ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துவிட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 2022 ஜூலை மாதம் முதல் விண்ட் ஃபால் டாக்ஸ் எனப்படும் வரி விதிக்கப்பட்டுள்ளது. ஆற்றல் துறைக்கு வரும் அதீத வரியில் ஒரு குறிப்பிட்ட பகுதியை விண்ட்ஃபால் டாக்ஸ் என்ற பெயரில் மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்களிடம் வரியாக வசூலித்து வருவது குறிப்பிடத்தக்கது.