அரசாங்கம் உதவ வேண்டும்: கேட்கிறார் பிரபலம்..
ஸ்டீல் உள்ளிட்ட சில துறைகளுக்கு அரசாங்கம் உதவ முன்வரவேண்டும் என்று பிரபல ஸ்டீல் தயாரி்ப்பு நிறுவனமான டாடா ஸ்டீல்ஸின் சிஇஓ நரேந்திரன் கோரியுள்ளார். பசுமை ஆற்றலை தொழிற்சாலைகளிலும் பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ள நிலையில் இவ்வாறு அவர் கோரியுள்ளார். சோலார் பேனல்கள், காற்றாலைகள், பைப்லைன்கள் உள்ளிட்ட எல்லா துறைகளிலும் ஸ்டீலின் தேவை உள்ளதாக கூறியுள்ள நரேந்திரன், ஸ்டீல்தான் உலகில் பரவலாக பயன்படுத்தப்படும் உலோகம் என்றார்.ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் 100முதல் 150 மில்லியன் டன் ஸ்டீலை இந்தியா மட்டும் உற்பத்தி செய்ய இருப்பதாக கூறியுள்ள அவர், வெறும் மாற்று ஆற்றலை மட்டும் கண்டுபிடித்தால் போதாது என்று கூறியுள்ள அவர், சிமெண்ட் உற்பத்தி இருமடங்காக ஆகியுள்ளதாக கூறியுள்ளார். ஸ்டீல் துறைக்கு முதலில் நிலக்கரி,பின்னர் கேஸ், அதன் பின்னர் ஹைட்ரஜன் என பரிமாற்றம் அடைந்தாலும் விநியோக சங்கிலி மிகவும் சிக்கலாக இருப்பதாக கூறினார்.பசுமை ஆற்றல் சார்ந்த பொருட்களை வாங்க வாடிக்கையாளர்கள் ஆர்வம் காட்டினாலும் ஸ்டீல் துறையில் கடினம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இதற்கான உதாரணங்கள் அமெரிக்கா ,ஐரோப்பாவில் தொடங்கியுள்ளதாகவும் கூறினார்.
கரியமில வாயு உமிழ்வில் ஸ்டீலின் பங்கு 8%ஆக இருப்பதாக கூறியுள்ள நரேந்திரன்,இதற்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார். ஏற்கனவே நெதர்லாந்தில் கேசுக்கு பதிலாக ஹைட்ரஜனை பயன்படுத்தித்தான் ஸ்டீல் தயாரிக்கப்படுவதாகவும் நரேந்திரன் கூறியுள்ளார். பிரிட்டனில் இதே நிலை இல்லை என்றும் பழைய பொருட்களை எரித்துதான் ஸ்டீல் தயாரிக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.