விற்க தயாராக LIC IPO.. விரைவில் இறுதி ஆவணம் தாக்கல்..!!
LIC IPO-க்கள் விற்பனை தொடர்பாக இறுதி ஆவணங்களை மத்திய அரசு விரைவில் தாக்கல் செய்யவுள்ளது.
பங்குகளை விற்கும் LIC:
இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான Life Insurance Corporation Of India(LIC) 5 சதவிகித பொதுப்பங்குகளை (IPO) விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்கு பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, கடந்த ஆண்டு ஒப்புதல் அளித்தது. பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய நிதிநிலை அறிக்கையில், விரைவில். LIC-யின் பொதுப்பங்குகள் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. பிப்ரவரி 14-ம் தேதி, LIC IPO-வுக்கான வரைவு அறிக்கை பிப்ரவரி 14-ம் தேதி, பங்குச் சந்தை காப்பீட்டு வாரியமான SEBI-யிடம் தாக்கல் செய்யப்பட்டது. எல்ஐசி விண்ணப்பித்த 22 நாட்களிலேயே செபி அனுமதி வழங்கியுள்ளது. இதனிடையே, உக்ரைன் ரஷ்யா போர் காரணமாக எல்ஐசி ஐபிஓக்கள் விற்பனை தள்ளி போயுள்ளது.
விரைவில் இறுதி ஆவணம் தாக்கல்:
இந்த நிலையில், LIC IPO-க்கள் விற்பனை குறித்த இறுதி ஆவணங்களை மத்திய அரசு விரைவில் தாக்கல் செய்ய உள்ளது. இந்த இறுதி அறிக்கையில்தான், எல்ஐசியின் ஒரு பங்கின் விலை எவ்வளவு, சில்லறை வர்த்தகர்கள், எல்ஐசி பாலிசிதாரர்கள், எல்ஐசி ஊழியர்களுக்கு எத்தனை சதவீதம் கிடைக்கும், எவ்வளவு தள்ளுபடி, எத்தனை பங்குகளை விற்க அரசு திட்டமிட்டுள்ளது என்பது உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் அதிகாரப்பூர்வமலாக தெரிவிக்கப்பட்டு இருக்கும். எல்ஐசி ஐபிஓ விற்பனை தொடர்பான டிஆர்ஹெச்பி ஒப்புதல் கிடைத்து விட்டது. அடுத்து ஆர்ஹெச்பி தாக்கல் செய்யவுள்ளோம். அதில்தான் பங்கின் விலை, எத்தனை பங்குகள், சலுகைகள் ஆகிய விவரங்கள் இடம்பெற்றிருக்கும். பங்குச் சந்தையின் சூழல்களை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். தக்க நேரம் வரும்போது பங்கு விற்பனை குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.