GST வசூல் எவ்வளவு தெரியுமா? – ரூ.1,33,026 கோடி..!!
நடப்பு ஆண்டின் பிப்ரவரி மாதத்தில், மொத்த சரக்கு மற்றும் சேவை வரி (GST) ரூ.1,33,026 கோடி வசூலானது என்று நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.,
இதில் மத்திய சரக்கு மற்றும் சேவை வரி (CGST) ரூ. 24,435 கோடியாகவும், மாநில சரக்கு மற்றும் சேவை வரி (SGST) ரூ. 30,779 கோடியாகவும், சர்வதேச சரக்கு மற்றும் சேவை வரி (IGST) ரூ.67,471 கோடியாகவும் இருந்தது என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அமைச்சகத்தின் கூற்றுப்படி, 2022 பிப்ரவரி மாதத்துக்கான வருவாய் கடந்த ஆண்டு இதே மாதத்தில் ஜிஎஸ்டி வருவாயை விட 18 சதவீதம் அதிகமாகும் மற்றும் பிப்ரவரி 2020 இல் ஜிஎஸ்டி வருவாயை விட 26 சதவீதம் அதிகமாகும்.
GST அமல்படுத்தப்பட்டதில் இருந்து, இதுவரை ஐந்தாவது முறையாக ரூ.1.30 லட்சம் கோடியை GST வசூல் தாண்டியுள்ளது. செஸ் வசூல் ரூ.10,000 கோடியைத் தாண்டியது, இது சில முக்கிய துறைகள், குறிப்பாக ஆட்டோமொபைல் விற்பனையின் மீட்சியைக் குறிக்கிறது என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.