ஜூன் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ₹1.44 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது
ஜூன் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் 56% அதிகரித்து ₹1.44 லட்சம் கோடியாக இருந்தது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மே மாதத்தில், ஜிஎஸ்டி வசூல் எண்ணிக்கை ₹1,40,885 கோடியாக இருந்தது. இது ஆண்டுக்கு ஆண்டு 44% அதிகரித்துள்ளது. ஜிஎஸ்டி தொடங்கப்பட்டதில் இருந்து ஐந்தாவது முறையாக மாதாந்திர ஜிஎஸ்டி வசூல் ₹1.40 லட்சம் கோடியைத் தாண்டியது என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும் நிதியமைச்சர் கூறுகையில், ”மாநிலங்களுக்கான இழப்பீட்டுத் தொகையை 5 ஆண்டுகளுக்குத் தொடரவில்லை என்றால், குறைந்தபட்சம் சில ஆண்டுகளுக்காவது தொடரலாம் என்று மாநிலங்கள் கூறுகின்றன” என்றார்.
இரண்டு நாள் 47வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் சண்டிகரில் நடந்தது. இந்த கூட்டத்தில் ஏராளமான பொருட்களின் மீதான ஜிஎஸ்டியும் திருத்தப்பட்டது. அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மதுரையில் ஆகஸ்ட் முதல் வாரத்தில் நடைபெறவுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி ஒரு ட்வீட்டில் சரக்கு மற்றும் சேவை வரி, ஒரு பெரிய வரி சீர்திருத்தம் என்று பாராட்டினார், இது ‘வணிகத்தை எளிதாக்குவதை’ மேலும் மேம்படுத்துகிறது மற்றும் ‘ஒரே நாடு , ஒரே வரி” என்ற கொள்கையை நிறைவேற்றியது என்று கூறினார்.