GST-யை உயர்த்த திட்டம்.. – ஜீ அரசுக்கு கூடும் வருவாய்..!!
குறைந்தபட்ச GST விகிதமானது 5 சதவீதத்திலிருந்து 8 சதவீதமாக உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி, 5, 12, 18 மற்றும் 28 சதவீதம் என நான்கு அடுக்குகளாக இப்போது உள்ளது. இந்த நிலையில், குறைந்தபட்ச ஜிஎஸ்டி விகிதத்தை 5 சதவீதத்திலிருந்து 8 சதவீதமாக அதிகரிப்பது குறித்து ஆலோசிகக்கப்பட உள்ளது.
மார்ச் மாத இறுதியில் அல்லது ஏப்ரல் மாதத்தில் நடைபெறவுள்ள ஜிஎஸ்டி கவுன்சில் அறிக்கை தாக்கல் செய்யப்பட கூடும் என்றும், இதுகுறித்து ஆலோசனை செய்யப்படும் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இவ்வாறு உயர்த்தப்படுவதால், குறைந்தபட்ச GST விகிதம் 8 சதவீதமாக அதிகரிக்கப்படுவதால், அரசுக்கு கூடுதலாக ரூ.1.50 லட்சம் கோடி வரி வருவாய் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
இத்துடன், தற்போது நான்கு அடுக்குகளாக உள்ள ஜிஎஸ்டி விகிதத்தை 3 அடுக்குகளாக குறைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.