ஜூன் மாத ஜிஎஸ்டி சரிவு..?
கடந்த ஜூன் மாத ஜிஎஸ்டி வசூல் என்பது கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. வழக்கமாக ஜிஎஸ்டி வரி வசூல் நிலவரம் குறித்து ஒரு மாதம் முடிந்த அடுத்த மாதத்தின் முதல் நாளில் வெளியிடப்படுவது வழக்கம் ஆனால் இந்த முறை அப்படி வெளியிடப்படவில்லை. மறைமுக வரிகள் குறித்த எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை. ஜிஎஸ்டி அறிமுகமான ஜூலை 1 ஆம் தேதியே அதற்கான அறிவிப்புகள் ஏதும் வெளியிடப்படவில்லை. வீட்டு உபயோக பொருட்களின் ஜிஎஶ்டி குறைந்திருப்பதால் ஒவ்வொரு வீட்டிலும் மகிழ்ச்சி இருப்பதாக நிதியமைச்சகம் கூறியுள்ளது. இந்தியாவின் கிராஸ் ஜிஎஸ்டி என்பதன் வளர்ச்சி 7.74%ஆக இருக்கிறது. அதாவது 1.61லட்சம் கோடியில் இருந்து 1.74 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. கடந்த ஏப்ரலில் நெட் ஜிஎஸ்டி வசூல் என்பது 15.5விழுக்காடு உயர்ந்து 1.92 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. ஆனால் மே மாதத்தில் வருவாய் என்பது 6.9 விழுக்காடு சரிந்துள்ளது. மத்திய மற்றும் மாநில ஜிஎஸ்டி குறித்த அதிகாரபூர்வ தரவுகள் இல்லாத நிலையில், 39,600 கோடி ரூபாயை மத்திய ஜிஎஸ்டியாகவும், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டியில் இருந்து தரப்பட்டது. அதே நேரம் 33,548 கோடி ரூபாயை ஐஜிஎஸ்டி பூலில் இருந்து மாநிலங்களுக்கு தொகை அளிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு ஜுன் மாதத்தில் ஐஜிஎஸ்டி வசூல் 80,292 கோடி ரூபாயாக இருந்த நிலையில் அப்போது மத்திய அரசுக்கான ஜிஎஸ்டியாக 36,224 கோடியும், மாநிலங்களுக்கு 30,269 கோடி ரூபாயாகவும்அளிக்கப்பட்டது. ஆனால் இந்தாண்டு ஐஜிஎஸ்டியில் இருந்து 9.3% மட்டுமே மத்திய ஜிஎஸ்டிக்கும், 10.8% மட்டுமே மாநிலங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன.
ஜூனின் ஜிஎஸ்டி வசூல் சரிவது போன்ற காட்சியளிப்பது, ஜிஎஸ்டி வரிகளை மறு சீரமைப்பு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்படுகிறது.