ஜூலையில் ஜிஎஸ்டி அமோகம்…
சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி கடந்த மாதம் மட்டும், 1லட்சத்து 65 ஆயிரம் கோடி ரூபாய் வசூலாகியுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இது ஜிஎஸ்டி வரலாற்றில் 3 ஆவது அதிகபட்ச வரிவசூலாகும்.ஜூன் மாதத்தை விட 2.2%அதிக தொகை ஜிஎஸ்டியாக வசூலிக்கப்பட்டுள்ளது. ஒன்றரை லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை மத்திய அரசு வசூலிப்பது இது தொடர்ந்து 5 ஆவது முறையாகும். நடப்பு நிதியாண்டில் 12 விழுக்காடு அளவுக்கு கூடுதல் ஜிஎஸ்டி வரி வசூல் கிடைக்க நிதியமைச்சகம் இலக்கு கொண்டுள்ளது. மத்திய ஜிஎஸ்டியாக 29773 கோடி ரூபாயும்,மாநில ஜிஎஸ்டியாக 37623 கோடி ரூபாயும்,ஒருங்கிணைந்த ஜிஎஸ்டியாக 85930 கோடி ரூபாய் வரி வருவாய் கிடைத்திருக்கிறது.செஸ் வரியாக 11,779 கோடி ரூபாய் மத்திய அரசுக்கு கிடைத்திருக்கிறது. கிடைத்த வருவாயில் மத்திய ஜிஸ்டிக்கு 39,785 கோடி ரூபாயும், மாநில ஜிஎஸ்டிக்கு 33188 கோடி ரூபாயும் செட்டில் செய்யப்பட்டுள்ளது. செட்டில் செய்தது போக மீதம் 69 ஆயிரத்து 558 கோடி ரூபாய் மத்திய அரசுக்கு மீதம் கிடைத்திருக்கிறது. உள்நாட்டு பரிவர்த்தனைகளில் கடந்தாண்டைவிட இந்தாண்டு குறிப்பிட்ட விகிதம் அதிகரித்துள்ளது.2017-18 காலகட்டத்தில் ஜிஎஸ்டி வரி 1 லட்சம் கோடிக்கும் குறைவாக இருந்த நிலையில் ஆண்டுக்கு ஆண்டு இது உயர்ந்து வருகிறது. 10 விழுக்காடு அளவுக்கு கடந்தாண்டைவிட இந்த தொகை அதிகமாகும்.