வங்கியில் பணம் எடுக்க கூடுதல் வரி
பெட்ரோல் மற்றும் டீசல் மீதான ஏற்றுமதி வரியை ரத்து செய்த மத்திய அரசு, சாமானிய மக்கள் பயன்படுத்தும் வங்கி சேவைகளுக்கு 18 சதவிதம் சரக்கு மற்றும் சேவை வரியை விதித்துள்ளது. அண்மையில் வெளியான சரக்கு மற்றும் சேவை வரி உயர்வில், பல்வேறு பொருட்கள் மீதான வரியை உயர்த்த ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல் வழங்கியது. இதில், கவனிக்கத்தக்க விஷயம் காசோலை மீதான ஜிஎஸ்டி வரி. அண்மையில் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் காசோலை மீதான வரி 18 சதவிதவிதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. பொதுவாக வங்கியில் பணம் எடுக்கும் முறையில், SELF CHEQUE என்ற முறை உள்ளது. அதாவது, ஒருவர் தன் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்க வேண்டும் என்றால், வங்கியில் தனக்கு வழங்கப்பட்டுள்ள காசோலையில், SELF என்று எழுதி, தொகையில் பூர்த்தி செய்த், கையெழுத்திட்டு கொடுத்தால், வங்கியில் பணம் பெற்று கொள்ளலாம். தற்போது இந்த காசோலைக்கும் 18 சதவிதம் ஜிஎஸ்டி விதிக்கப்பட்டு உள்ளது. வங்கிகளில் வழங்கப்படும் காசோலை புத்தகத்தில், ஒரு காசோலையின் விலை 3 ரூபாய். தற்போது இதற்கு தான் 18 சதவிதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. அதாவது, வரி உடன் சேர்த்து ஒரு காசோலையின் விலை 3 ரூபாய் 54 காசுகளாக அதிகரித்துள்ளது. இதில் 54 காசுகள் வரியாக மட்டுமே செலுத்தப்படுகிறது.
அபராத தொகைக்கு 18 சதவிதம் வரி
அதேபோல், வங்கியில் பராமரிக்க வேண்டிய minimum balance ஐ பராமரிக்க தவரினால். அதற்கு விதிக்கப்படும் தொகைக்கும் 18 சதவிதம் வரி விதிக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக, உங்கள் வங்கி கணக்கில், மாதம் 10 ஆயிரம் ரூபாய் minimum balance வைத்திருக்க வேண்டும் என்றால், இந்த தொகை வங்கி கணக்கில் வைத்திருக்கப்பட வேண்டும். மாத இறுதியில் கணக்கிடும் போது, ஒரு வேளை 2500 ரூபாய் தான் average minimum balance வருகிறது என்றால், அதற்கு 600 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். இந்த 600 ரூபாய்க்கு 108 ரூபாய் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. minimum balance வைக்காமல் போகும் பட்சத்தில் வசூலிக்கப்படும் கட்டணம் நகர்ப்புற வங்கி கணக்கா அல்லது கிராமப்புற வங்கி கணக்கா என்பதை பொறுத்து மாறுகிறது. ஆனால், அனைத்திற்கும் 18 சதவிதம் ஜிஎஸ்டி வரி என்பது நிலையானது.
அனைவரும் இணையத்தில் பணம் அனுப்பும் பழக்கம் அதிகரித்துள்ள நிலையில், IMPS மூலம் அனுப்பும் பணத்திற்கு ஏற்கனவே சேவைக்கட்டணம் உள்ளது. இது 15 ரூபாய் வரை வசூல் செய்யப்படுகிறது. இந்நிலையில், இந்த 15 ரூபாய்க்கும் 18 சதவிதம் வரி விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, பணத்தை வங்கியில் இருந்து எப்படி எடுத்தாலும், அதற்கு கூடுதலாக வரி செலுத்த வேண்டிய நிலைக்கு சாமானிய மக்கள் தள்ளப்பட்டு உள்ளனர். வங்கி சேவைகளில் சரக்கு மற்றும் சேவை வரி அதிகரிக்கப்படுவதால், சாமானிய மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்..