சந்தோஷமே இங்கு சந்தோஷமே….!!
வாரத்தின் கடைசி வர்த்தக நாளான வெள்ளிக்கிழமை இந்திய பங்குச்சந்தைகள் மிகப்பெரிய ஏற்றத்தை சந்தித்தன. இந்த வெள்ளிக்கிழமை சூப்பர் ஃபிரைடேவாகவே பார்க்கப்படுகிறது. இந்திய பங்குச்சந்தைகளில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்ந்து 59 ஆயிரத்து 808 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவுற்றது. இதே போல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 272 புள்ளிகள் உயர்ந்து 17ஆயிரத்து 594 புள்ளிகளில் வர்த்தகம் முடிந்தது.அதானி குழும நிறுவனங்களில் GQG முதலீடு செய்ததை அடுத்து அதானி குழும பங்குகள் 68ஆயிரத்து351 கோடி உயர்ந்துள்ளது. இதன் விளைவாக இந்திய பங்குச்சந்தைகளில் சாதகமான சூழல் காணப்பட்டது. Adani Enterprises, Adani Ports, SBI, Bharti Airtelஉள்ளிட்ட நிறுவனங்கள் லாபத்தை பதிவு செய்துள்ளன.Tech Mahindra, UltraTech Cement, Cipla, Divis Labs ஆகிய நிறுவனங்கள் சரிவை சந்தித்தன.பொதுத்துறை வங்கிகள், 5.4% உயர்ந்தது. உலோகம்3.5,வங்கித்துறை பங்குகள் 2விழுக்காடு உயர்ந்தன.FMCG, energy , மற்றும் உள்கட்டமைப்புத்துறை பங்குகள் தலா 1விழுக்காடு ஏற்றம் கண்டுள்ளன. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு 24 ரூபாய் குறைந்துள்ளது.ஒரு கிராம் தங்கம் 5 ஆயிரத்து 240 ரூபாய்க்கும், ஒரு சவரன் தங்கம் 41 ஆயிரத்து 920 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி 70 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. கட்டி வெள்ளி விலையும் கிலோ 70 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. (இந்த விலைகள் 3%ஜிஎஸ்டி இல்லாமல் பதிவிடப்பட்டுள்ளன)