வரி செலுத்துவோருக்கு ஹாப்பி நியூஸ்..
வருமான வரி செலுத்துவோருக்கு சற்று நிம்மதி அளிக்கும் வகையில் நிதியமைச்சகம் புதிய திட்டத்தை செய்து வருகிறது.
அதாவது தற்போது நடைமுறையில் உள்ள பழைய வருமான வரி செலுத்தும் முறை மற்றும் புதிய முறையில் ஸ்டாண்டர்ட் டிடக்ஷன் தொகை அதிகரிக்கப்பட இருக்கிறது. நரேந்திர மோடி தலைமையிலான 3 ஆவது ஆட்சியின் முதல் முழுநீள பட்ஜெட் விரைவில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. ஸ்டான்டர்ட் டிடக்சன் தொகையை மாற்றியமைப்பது தொடர்பாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது அதிகாரிகளுடன், பல தரப்பட்டவர்களிடம் கருத்து கேட்டு வருகிறார். எனினும் இறுதி முடிவை பிரதமர் அலுவலகமே எடுக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. சலுகை அதிகரிக்கும் அதே நேரம் மத்திய அரசுக்கு வரி வருவாய் பாதிக்காத வகையில் திட்டம் தீட்டப்பட்டு வருகிறது. தற்போது வரை 3 லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பாதித்தால் 5 விழுக்காடு மத்திய அரசுக்கு வரிகட்டவேண்டும். சம்பளம் வாங்குவோருக்கு உதவும் நோக்கில் அண்மையில் ஸ்டான்டர்ட் டிடக்ஷன் உதவும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் புதிய அறிவிப்பு அமலானால் வரி செலுத்துவோருக்கு கூடுதல் நிம்மதி கிடைக்கும், அதே நேரத்தில் மத்திய அரசுக்கு வரி வருவாய் பாதிக்கப்படும் என்பதையும் பார்க்கவேண்டும்