டெக் இந்தியர்களுக்கு ஹேப்பி நியூஸ்..
அமெரிக்க குடியுரிமை மற்றும் தூதரக அதிகாரிகள் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.அதாவது அமெரிக்காவில் 5 ஆண்டுகள் தங்கி வேலை செய்யும் புதிய employment card வசதியை அமெரிக்கா அறிமுகப்படுத்துகிறது. பணி காரணங்களுக்காக ஆண்டுக்கணக்கில் காத்திருக்கும் இந்திய டெக் பணியாளர்களுக்கு இந்த அறிவிப்பு உத்வேகத்தை அளித்துள்ளது. புதிய கார்டுகள் வந்துவிட்டால், Form I-765ஐஅப்ளை செய்யவேண்டிய அவசியம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு செல்ல இந்தியர்கள் 10.5 லட்சம் பேர் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர். அமெரிக்காவில் தங்கி வேலை செய்யும் கிரீன் கார்டு வசதி,அமெரிக்காவில் தங்கி வேலை பார்க்க உதவும்,அமெரிக்காவில் தங்கி வேலை பார்க்கும் கிரீன் கார்டு வைத்திருப்போரின் எண்ணிக்கை 18 லட்சமாக இந்தாண்டு உயர்ந்திருக்கிறது.இதில் 11 லட்சம் பேர் அதாவது 63%மக்கள் இந்தியர்கள் என்கிறது அமெரிக்க புள்ளி விவரம். 14% கிரீன் கார்டு வைத்திருப்போர் சீனாவைச் சேர்ந்தவர்கள் என்றும் அமெரிக்க அரசு தரவுகள் தெரிவிக்கின்றன.