பட்ட கஷ்டத்துக்கு பலன்கிடைக்க போகுது..
பணவீக்கம் இந்தியாவை மட்டுமல்ல பல நாடுகளை பாதிக்கும் மிக முக்கிய பிரச்னையாக உள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் பிரபலமாக உள்ள வீட்டு உபயோக உணவுதானிய பொருட்கள் விற்கும் நிறுவனங்களின் தலைவர்கள் அண்மையில் கூடி பேசினர். அதில் அண்மையில் விலைவாசி உயர்வு குறைந்துவிட்ட காரணத்தால், பொருட்கள் விலை குறைக்கவும், அதே விலைக்கு கூடுதல் பொருட்கள் அளிக்கவும் முடிவு செய்துள்ளனர் கடந்த 2 ஆண்டுகளாக இரட்டை இலக்கங்களில் இருந்து பணவீக்கம் தற்போது வெறும் 3-4 விழுக்காடு அளவுக்கு சரிந்துள்ளதால் நிறுவனங்களின் லாபம் அதிகரித்துள்ளதாக கூறியுள்ளனர் வெறும் லாபத்தை மட்டும் குறியாக தங்கள் நிறுவனம் வைக்கவில்லை என்று பிரிட்டானியா நிறுவனம் தெரிவித்துள்ளது வோல்டாஸ், ஹாவெல்ஸ், புளூஸ்டார் உள்ளிட்ட ஏசி நிறுவனங்களின் மூலப்பொருட்கள் விலையும் கணிசமாக குறைந்துள்ளதால், இந்த நிறுவன பொருட்கள் விற்பனையை அதிகரிக்க ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன
சில நிறுவனங்கள் அதிரடி சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு அளிக்கவும் முடிவு செய்துள்ளனர்
இந்துஸ்தான் யுனிலிவிர் நிறுவனம் இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. இந்த நிறுவனமும் தனது பொருட்களின் விலையை குறைக்கவும், பொருட்களின் அளவுகளை அதிகப்படுத்தவும் திட்டமிட்டு வருகிறது.டாடா நிறுவனத்தின் டீ,காபி உள்ளிட்ட பொருட்களின் விலை குறைந்து வாடிக்கையாளர்கள் அதிகம் வாங்கத் தொடங்கியுள்ளதாகவும், மேரிகோ நிறுவனத்தின் பொருட்கள் குறிப்பா தேங்காய் எண்ணெய் பொருட்கள் விலை குறைந்திருப்பதால் மக்கள் தங்கள் வீடுகளுக்கு வழக்கத்தைவிட அதிகம் வாங்கிச்செல்வதும் தெரியவந்துள்ளது
உணவுப்பொருட்கள்,வீட்டு உபயோகம் மற்றும் அழுகுசாதன பொருட்கள் விலையும் கடந்த 6 காலாண்டுகளில் இல்லாத அளவுக்கு வாடிக்கையாளர்களுக்கு சாதகமாக அமைந்துள்ளன.இதனால் கொரோனாவுக்கு முன்பு இருந்த அளவுக்கு மக்கள் இயல்புநிலைக்கு பொருட்களை வாங்கத் தொடங்கிவிட்டதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.