ஹரி சங்கர் சதியால் பல கோடி இழப்பா?
ஹரி சங்கர் டிப்ரேவாலா என்பவர் துபாயை அடிப்படையாக கொண்ட ஹவாலா மோசடி செய்த நபராக சந்தேகிக்கப்படுகிறார். இவர் இந்தியபங்குச்சந்தையில் குறிப்பிடத்தகுந்த பாதிப்பை இந்திய பங்குச்சந்தையில் ஏற்படுத்தியிருக்கிறார்.
20க்கும் மேற்பட்ட சிறிய நிறுவனங்களின் பங்குகளை வீழ்ச்சி அடைய செய்துவிட்டதாக இவர் மீது புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக அமலாக்கத்துறை தற்போது விசாரணையை தொடங்கியுள்ளனர். குறிப்பிட்ட நிறுவனங்களை திடீரென திவாலாக்கியதால் அவற்றில் முதலீடு செய்த முதலீட்டாளர்களுக்கு நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் பணம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. கடந்த 1863 ஆம் ஆண்டில் இந்திய சந்தைகள் உடைந்தன. ஹர்ஷத் மேத்தா என்பவர் 13 விழுக்காடு சரிவை ஏற்படுத்தியிருந்தார். இதேபோல் கேதன்பாரேக் என்பவரும் மோசடி செய்திருக்கிறார். இதேபோல் கடந்த 1996-ஆம் ஆண்டும் கோடிக்கணக்கான மோசடிகள் இருந்தன. இந்தியாவின் மிகப்பெரிய பரஸ்பர நிதி மோசடி 1996-ல் தான் நடந்தது. இதற்கு பிறகு பங்குச்சந்தை மோசடி 2015 ஆம் ஆண்டு நடந்தது. அப்போதைய தலைவராக இருந்த சித்ரா ராமகிருஷ்ணன் மற்றும் இமய மலை யோகி ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது,. பங்குச்சந்தை விதிகள் மிகவும் கடினமாக இருக்கும்போதும் ஏதோ ஒரு வகையில் மோசடிகள் தொடர்ந்துகொண்டே இருப்பது குறிப்பிடத்தக்கது