லாபம் சம்பாதிச்சீங்களா..வரி கட்ட தயாரா இருங்க..
Tata Tech, IREDA ஆகிய நிறுவனங்கள் தங்கள் ஆரம்ப பங்கு வெளியீட்டை அண்மையில் செய்திருந்தன. இதில் குறிப்பிட்ட தொகையில் பங்குகளை வாங்கி குறுகிய காலகட்டத்தில் அதில் வந்த லாபத்தை பலரும் பதிவு செய்தனர்.
அதாவது டாடா டெக் நிறுவன பங்குகள் விற்கப்பட்டது வெறும் 500 ரூபாய்க்குத்தான், அதே நேரம் அது டிசம்பர் 1 ஆம்தேதி 1400 ரூபாயாக உயர்ந்தது. இதே போல் IREDA நிறுவன பங்குகள் 32 ரூபாய்க்கு விற்கப்பட்டன. பிறகு அது 65 ரூபாயாக விலை அதிகரித்தது. குறுகிய காலத்தில் லாபம் அதிகம் சம்பாதித்து இருந்தாலும்,அதற்கு தகுந்த வரியை அரசுக்கு செலுத்தித்தான் ஆகவேண்டும். அரசாங்கம் சொல்லும் விதிப்படி ஓராண்டுக்குள் ஒரு பங்கை விற்றால் அது குறுகியகால லாபமாக கருதப்படும்.இதற்காக 15%வரி செலுத்தியே ஆகவேண்டும். 15விழுக்காடு வரி மட்டுமின்றி, கல்வி மற்றும் உயர்கல்வி செஸ் வரியும் கட்டியாகவேண்டும். இதே பங்குகளை ஓராண்டு வைத்திருந்து விற்றிருந்தால் அதற்காக 10விழுக்காடு வரி மட்டுமே வசூலிக்கப்படும். குறைந்த வருவாய் உள்ளவர்களில் சாதாரண மக்களுக்கு இரண்டரை லட்சம் ரூபாய் வரையும், மூத்த குடிமக்களுக்கு 3 லட்சம் ரூபாயும், 80 வயதுக்கு மேற்பட்டோருக்கு 5 லட்சம் ரூபாய் வரையும் வரி கிடையாது
ஆனால் அதே நேரம் இந்த அளவை தாண்டுவோர் கட்டாயம் வரி செலுத்த வேண்டும். நீங்கள் வாங்கிய பங்குகள் ஓராண்டுக்குள் சரிவை சந்தித்து இருந்தால் அதற்கு உண்டான இழப்பை ஈடு செய்துகொள்ள இயலும். ஆரம்ப பங்கு வெளியீட்டில் கிடைத்த பணம் மற்றும் அது தொடர்பான வருமான வரியை 31 ஜூலைக்குள் தாக்கல் செய்ய வேண்டும், வழக்கமான ITR-1,ITR-4ஆகிய படிவங்களில் இந்த தொகைகளை கணக்கு காட்ட இயலாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.