முதலீடு செய்தீர்களா உஷார்..எச்சரிக்கிறார் மொய்த்ரா..!!!!
திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மொஹுவா மொய்த்ரா அதிரடியான கருத்துகளுக்கு மிகவும் பெயர் பெற்றவராவார். இவர் அண்மையில் அதானி குழும பங்குகளை பற்றி ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளார். அதாவது ,அதாவது அதானி குழும நிறுவனங்களுக்கு ஆடிட்டராக செயல்பட்ட நபர் பணியில் இருந்து விலக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளதாக கூறியுள்ளார். அதானி குழுமத்துக்கு டெலாய்ட் ஹாஸ்கின்ஸ் என்ற நிறுவனம் கணக்குகளை பார்த்து வருகிறது. அரசாங்கத்தின் அபிமான நிறுவனத்தில் இருந்து எப்படி இவர்கள் விலக முடியும், டெலாய்ட் நிறுவனத்திற்கு அமலாக்கத்துறை சோதனை நடந்தாலும் ஆச்சர்யம் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். இதனால் முதலீட்டாளர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் மொய்த்ரா தெரிவித்துள்ளார். டெலாய்ட் நிறுவனம் அதானி குழுமத்துடனான தொடர்பை முடித்துக் கொள்வது குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், இது குறித்த அதிகராபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்பிருப்பதாக புளூம்பர்க் நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. ஏற்கனவே ஹிண்டன்பர்க் நிறுவன அறிக்கையால் ஆடிப்போயுள்ள அதானி குழுமம் ,தற்போது ஆடிட்டிங் நிறுவனம் வெளியேறுவதால் பாதிக்கப்படவும் வாய்ப்பு உள்ளது. ஹிண்டன்பர்க் அறிக்கை தொடர்பாக செபி விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய இருக்கும் சூழலில் அதானி குழுமத்துக்கு இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹிண்டன்பர்க் அ்றிக்கை வெளியான போது டெலாய்ட் நிறுவனம் அதானி குழுமத்துக்கு ஆதரவாகவும், அதானி குழுமம் எந்த விதிகளையும் மீறவில்லை என்று தெரிவித்திருந்தது. அண்மையில் இதுதொடர்பான விசாரணை அறிக்கை உச்சநீதிமன்றத்திலும் 6 நபர்கள் அடங்கிய குழு சமர்பித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.