போட்ட பணத்தை இன்னும் எடுக்கலையா?…
அலைந்து திரிந்து பாடுபட்டு சேர்க்கும் பணம் ஒவ்வொரு குடும்பத்தின் நிதி ஆதாரமாக திகழ்கிறது. இந்த நிலையில் அப்படி சேர்த்த பணத்தை சிலர் டெபாசிட் செய்துவிடுகின்றனர். டெபாசிட் செய்த பணத்தை பலரும் பல சமயங்களில் மறந்தேவிடுகின்றனர். சில நேரங்களில் அரும்பாடு பட்டு சேர்த்த பணத்தை சிலர் தங்கள் வங்கிக் கணக்குகளில் வைத்துவிட்டு இறந்தும்போய்விடுகின்றனர். அவர்களின் பணத்தை உரிமை கோராமல் ஒரு குறிப்பிட்ட பெருந்தொகை அப்படியே கிடக்கிறது.இப்படி உரிமை கோராமல் உள்ள பணத்தை உரிய வாரிசுகள் வாங்க உதவும் வகையில் ரிசர்வ் வங்கி உட்காம் போர்டல் என்ற தளத்தை உருவாக்கியுள்ளது. இந்த போர்டல் ஆனது உரிமை கோராத பணம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும்.ரிசர்வ் வங்கியின் தகவல் தொழில்நுட்ப பிரிவும், இந்திய வங்கி நிதி தொழில்நுட்பம் மற்றும் வங்கிகள் சார்ந்த குழுவினர் இணைந்து இந்த போர்ட்டலை உருவாக்கியுள்ளனர்.இந்த போர்ட்டலில் முதல் கட்டமாக 7 வங்கிகள் இணைக்கப்பட்டுள்ளன. வரும் அக்டோபர் 15ஆம் தேதியில் இருந்து படிப்படியாக மற்ற வங்கிகள் இணைக்கப்பட இருக்கின்றன. முதலில் வங்கிக்கணக்கில் லாகின்செய்ய வேண்டும்,பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு ஓடிபி எண் வரும். கணக்கு வைத்திருப்பவரின் பெயர் மற்றும் வங்கியின் பெயர் ஆகியவற்றை உள்ளீடு செய்ய வேண்டும், பான் எண்,வாக்காளர் அடையாள எண்,ஓட்டுநர் உரிமம் அல்லது பிறந்ததேதியை உள்ளீடு செய்யவும், பின்னர் உரிமை கோரப்படாத பணம் இருந்தால் காண்பிக்கும்,இல்லையெனில் ஏதும் இல்லை என்ற தரவு திரையில் தோன்றும்.